உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனையும் நடந்து முடிந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு ஒரு டிக்கெட் மட்டும் ரூ.57 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SL vs BAN: 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை– வங்கதேசம் பலப்பரீட்சை: மழையால் பாதிக்கப்படுமா?

இவ்வளவு ஏன், ரசிகர் ஒருவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக கிட்டத்தட்ட 2000 கிமீ தூரம் வரையில் பயணம் செய்து டிக்கெட் வாங்க வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி டிக்கெட் கிடைக்க ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் போராடி வரும் நிலையில், தங்க டிக்கெட் திட்டத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்ட நாளன்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு முதல் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இந்த கோல்டன் டிக்கெட் பெறும் பிரபலங்கள் இந்தியாவில் நடக்கும் அனைத்து உலக்க கோப்பை போட்டிகளையும் விஐபி சீட்டில் அமர்ந்து பார்க்க முடியும். இந்த டிக்கெட்டிற்காக அவர்கள் பணம் கொடுக்க தேவையில்லை. இந்த கோல்டன் டிக்கெட்டானது இந்தியாவில் இருக்கும் பிரபலங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மகன் அங்கத் பும்ராவை பத்திரமாக பாத்துக்க சொல்லி விட்டு சூப்பர் 4 சுற்றுக்காக இந்திய அணியுடன் இணைந்த பும்ரா!

உலகக் கோப்பைக்கான முதல் கோல்டன் டிக்கெட்டனது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டின் சின்னமாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர் ஒரு தலைமுறையை ஊக்குவித்தவர் என்பதால், அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மிக முக்கியமான பிரபலங்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.

Asia Cup 2023: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க வேண்டும் – ரோகித் சர்மா!

Scroll to load tweet…

Scroll to load tweet…