SL vs BAN: 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை– வங்கதேசம் பலப்பரீட்சை: மழையால் பாதிக்கப்படுமா?
இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடக்கிறது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியானது இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Asia Cup 2023: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க வேண்டும் – ரோகித் சர்மா!
கொழும்பு மைதானத்தில் கடந்த சில் நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இந்தப் போட்டி மட்டுமின்றி அடுத்து நடக்க உள்ள சூப்பர் 4 சுற்றுப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.