மகன் அங்கத் பும்ராவை பத்திரமாக பாத்துக்க சொல்லி விட்டு சூப்பர் 4 சுற்றுக்காக இந்திய அணியுடன் இணைந்த பும்ரா!
குழந்தை பிறந்த 4 நாட்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது லீக் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மனைவி சஞ்சனா கணேசனுக்கு முதல் குழந்தை பிறக்க உள்ள நிலையில், மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார்.
Asia Cup 2023: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க வேண்டும் – ரோகித் சர்மா!
கடந்த 4ஆம் தேதி காலையில், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றும், ஆண் குழந்தைக்கு அங்கத் என்றும் பெயரிட்டுள்ளதாகவும் பும்ரா கூறியிருந்தார். இதையடுத்து இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டி நடந்தது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பும்ரா பங்கேற்கவிலை.
இந்த நிலையில், தான் பும்ரா வரும் 10 ஆம் தேதி கொழும்புவில் நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றுக்கு தயாராகும் வகையில் இன்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அவர் கொழும்புவில் பயிற்சி பெற்று வரும் இந்திய அணியுடன் பும்ராவும் இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் போட்டியானது ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும், இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் டே அறிவித்துள்ளது.
India vs Pakistan: இந்திய அணிக்கு வார்னிங் கொடுத்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்!