Asia Cup 2023: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க வேண்டும் – ரோகித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ல் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியும் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, யுஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரோகித் சர்மா 59 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உள்பட 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடக்க வீரராக களமிறங்கி 250 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதுவரையில் 246 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 9,922 ரன்கள் குவித்துள்ளார். 10 ஆயிரம் ரன்கள் கடக்க இன்னும் 78 ரன்கள் எடுக்கவேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் வரும் 10 ஆம் தேதி நடக்க உள்ள சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் ரோகித் சர்மா 78 ரன்கள் எடுத்து 10000 ரன்களை கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India vs Pakistan: இந்திய அணிக்கு வார்னிங் கொடுத்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்!
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் சாதனையை தான் முறியடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். என் கனவில் கூட கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிப்பேன் என்று நினைத்ததில்லை. நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது நேரம் மிக முக்கியம் என்று அறிவுறுத்தப்பட்டேன்.
எப்போதும் பந்தை தரையோடு தரையாகத்தான் அடிக்க வேண்டும் என்று பயிற்சி செய்திருக்கிறேன். ஒருவேளை தப்பித் தவறி கூட பெரிய ஷாட்டுகளை விளையாடினால் அதன் பிறகு போட்டியிலிருந்து எங்களை நீக்கிவிடுவார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்களையும், ரோகித் சர்மா 539 சிக்ஸர்களையும் விளாசியுள்ளனர்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு அமெக்க ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா!