India vs Pakistan சூப்பர் 4 போட்டி மழையால் நின்றால் நின்ற இடத்திலிருந்து போட்டி தொடங்க ரிசர்வ் டே அறிவிப்பு!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி நாளை மறுநாள் 10 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

India vs Pakistan match will have a reserve day in Super 4 in Asia Cup 2023 rsk

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. கடந்த 6 ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டி நடந்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

India vs Pakistan: இந்திய அணிக்கு வார்னிங் கொடுத்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்!

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் 2ஆவது போட்டி நாளை நடக்கிறது. இதில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், தான் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடிய தோனி: வைரலாகும் வீடியோ!

கொழும்புவில் கன மழை எதிரொளி காரணமாக போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மழையின் காரணமாக போட்டி நடக்கவில்லை என்றால், பாகிஸ்தான் அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்று போட்டியில் முதல் வெற்றியை பெற்ற நிலையில், நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இலங்கையில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. மேலும், இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. தற்போது சூப்பர் 4 சுற்றின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் இலங்கையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு அமெக்க ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா!

இந்த நிலையில், தான் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது சூப்பர் 4 சுற்றுப் போட்டி நாளை நடக்க உள்ளது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், போட்டி நடக்கும் மைதானத்தை இதுவரையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் மாற்றவில்லை.

சூப்பர் 4 சுற்றில் மொத்தம் 6 போட்டிகள். இதில், ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 5 போட்டிகள் நடக்க உள்ளது. இந்த 5 போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில், தான் இந்த 5 நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், 5 போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது.

IND vs PAK: ஹர்திக் பாண்டியா ஷூ லேஸை கட்டிவிட்ட ஷதாப் கான்; பாராட்டு தெரிவித்து நடிகை இன்ஸ்டாவில் பதிவு!

அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி மட்டும் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாளுக்கு போட்டி மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதோடு, முதல் நாளில் போட்டி எதுவரையில் நடந்திருக்கிறதோ, அடுத்த நாள் அதிலிருந்து போட்டி மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios