IND vs PAK: ஹர்திக் பாண்டியா ஷூ லேஸை கட்டிவிட்ட ஷதாப் கான்; பாராட்டு தெரிவித்து நடிகை இன்ஸ்டாவில் பதிவு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலாக நடந்த ஆசிய கோப்பை தொடரின் 3ஆவது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவின் ஷூ லேஸை பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் கட்டிவிட்ட நிகழ்வு குறித்து நடிகை ஹினா கான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், விளையாட்டையும் மீறி மனதை கவரும் சில நிகழ்வுகளும் நடந்து வருகிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது. பொதுவாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றால் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், இது மைதானத்தில் விளையாடும் போது மட்டுமே. அதையும் தாண்டி மனதை கவரும் விஷயங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது.
Pakistan vs Bangladesh: ஆட்டம் காட்டிய இமாம் உல் ஹக்; பாகிஸ்தான் சிம்பிள் வெற்றி!
கடந்த 2 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 தொடரின் 3ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் ஆடியது. இதில், ரோகித் சர்மா 11, விராட் கோலி, 4, ஷ்ரேயாஸ் ஐயர் 14, சுப்மன் கில் 10 என்று முன்வரிசை வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
பாரத் என்று பெயர் மாற்றினால், இந்தியாவை பாகிஸ்தான் உரிமை கொண்டாடுமா?
அதன் பிறகு இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இஷான் கிஷான் 82 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே இந்தியா 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் இடைவேளையின் போது மழை பெய்யத் தொடங்கியது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில், போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. மேலும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. எனினும், பாகிஸ்தான் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக மொத்தமாக 3 புள்ளிகள் உடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
Pakistan vs Bangladesh: வங்கதேசத்திற்கு பயத்தை காட்டிய பாகிஸ்தான் ஹீரோஸ்: 193 ரன்களுக்கு ஆல் அவுட்!
இந்த நிலையில், தான் ஹர்திக் பாண்டியா பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது அவரது ஷூ லேஸானது கழன்றுள்ளது. அப்போது மைதானத்தில் பீல்டிங்கில் இருந்த ஷதாப் கான் அவரது ஷூ லேஸை கட்டிவிட்டுள்ளார். இச்சம்பவம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. இது குறித்து தான் நடிகை ஹினா கான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இரக்கத்தில் ஒரு உன்னதம் இருக்கிறது. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், எந்த மொழி பேசுகிறீர்கள் என்பதெல்லாம் மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பது எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி வீரர்களும் பயிற்சி செய்து கொண்டிருந்த போது விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை சந்தித்து அவர்களிடம் நட்பாக பேசியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.