Pakistan vs Bangladesh: ஆட்டம் காட்டிய இமாம் உல் ஹக்; பாகிஸ்தான் சிம்பிள் வெற்றி!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி 194 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Pakistan Beat Bangladesh by 7 Wickets difference in Super Fours 1st match of Asia Cup 2023 rsk

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியில் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக லிட்டன் தாஸ் அணியில் இடம் பெற்றார். இதே போன்று பாகிஸ்தான் அணியில், முகமது நவாஸிற்குப் பதிலாக பாஹீம் அஷ்ரப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாரத் என்று பெயர் மாற்றினால், இந்தியாவை பாகிஸ்தான் உரிமை கொண்டாடுமா?

இதையடுத்து முதலில் விளையாடிய வங்கதேச அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஷாகில் அல் ஹசன் 53 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Pakistan vs Bangladesh: வங்கதேசத்திற்கு பயத்தை காட்டிய பாகிஸ்தான் ஹீரோஸ்: 193 ரன்களுக்கு ஆல் அவுட்!

பாகிஸ்தான்:

ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், பாஹீம் அஷ்ரப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரீஷ் ராஃப்

வங்கதேசம்:

முகமது நைம், தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், தவ்ஹித்  ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், மஹெதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிஜுர் ரஹ்மான்,

MS Dhoni Bharat: பாரதியனாக மாறிய தோனி – வைரலாகும் இன்ஸ்டா புரோபைல் பிக்ஸர்!

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக வங்கதேச அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சு தரப்பில் பாகிஸ்தானின் ஹரீஷ் ராஃப் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், ஷாஹீன் அஃப்ரிடி, இப்திகார் அகமது மற்றும் பாஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி விளையாடியது. அதன்படி ஃபஹர் ஜமான் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஷாண்டோவிற்குப் பதிலாக இடம் பெற்ற லிட்டன் தாஸ் – பாகிஸ்தான் வேகத்திற்கு தாக்குப் பிடிக்குமா வங்கதேசம்?

இமான் உல் ஹக் அதிரடியாக விளையாடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் 17 ரன்களில் ஆட்டமிழக்க முகமது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அகா சல்மான் 12 ரன்கள் எடுத்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios