ஷாண்டோவிற்குப் பதிலாக இடம் பெற்ற லிட்டன் தாஸ் – பாகிஸ்தான் வேகத்திற்கு தாக்குப் பிடிக்குமா வங்கதேசம்?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 தொடரின் முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்றுடன் லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இன்று சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் தொடங்குகிறது. லாகூரில் நடக்கும் முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். வங்கதேச அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நஜ்முல் ஷாண்டோவிற்குப் பதிலாக லிட்டன் தாஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று பாகிஸ்தான் அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முகமது நவாஸிற்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பாஹீம் அஷ்ரப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸி, வீரர்கள் அறிவிப்பு!
பாகிஸ்தான்:
ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், பாஹீம் அஷ்ரப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரீஷ் ராஃப்
வங்கதேசம்:
முகமது நைம், தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், மஹெதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிஜுர் ரஹ்மான்,
Pakistan vs Bangladesh: சூப்பர் 4 முதல் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் பலப்பரீட்சை!
இரு அணிகளுக்கு இடையில் இதுவரையில் நடந்த 32 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் 32 போட்டிகளிலும் வங்கதேச அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஹோம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் 11 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறது. வங்கதேச அணி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அவே மைதானத்தில் நடந்த 14 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், வங்கதேச அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
இதே போன்று நடுநிலையான மைதானத்தில் நடந்த போட்டிகளில் பாகிஸ்தான் 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.