ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸி, வீரர்கள் அறிவிப்பு!
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடர் சென்னை, புனே, பெங்களூரு, லக்னோ, தர்மசாலா, ஹைதராபாத், அகமதாபாத் உள்பட 10 மைதானங்களில் நடக்கிறது.
Pakistan vs Bangladesh: சூப்பர் 4 முதல் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் பலப்பரீட்சை!
நேற்று உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஆஸ்திரேலியா தான் 5 முறை உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியிருக்கிறது. தற்போது 6 ஆவது முறையாக உலகக் கோப்பையை வெல்வதற்கான ஆஸ்திரேலியா அணியை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயமடைந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு திரும்பியுள்ளனர். மிட்செல் மார்ஷ், கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஷேன் அப்பாட் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஆஸ்டன் அகர் மற்றும் ஆடம் ஜம்பா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), டிராவிஸ் ஹெட் என்று பலரும் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், ஆஸ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஸ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.
ஆஸ்திரேலியா உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. அதே போன்று 2 பயிற்சி போட்டிகளிலும் விளையாடுகிறது. இதன் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா அணியால் சிறப்பாக தயாராக முடியும். வரும் 28 ஆம் தேதிக்குள்ளாக வீரர்களை மாற்றம் செய்ய நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்று ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
ஆஸ்திரேலியா விளையாடும் போட்டிகள்:
அக்டோபர் 08 – ஆஸ்திரேலியா – இந்தியா – சென்னை – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 12 – ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா – லக்னோ – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 16 – ஆஸ்திரேலியா – இலங்கை – லக்னோ – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 20 – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் – பெங்களூரு – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 25 – ஆஸ்திரேலியா – நெதர்லாந்து – டெல்லி – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 28 – ஆஸ்திரேலியா – நியூசிலாந்து – தர்மசாலா – பிற்பகல் 2 மணி
நவம்பர் 04 – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து – அகமதாபாத் – பிற்பகல் 2 மணி
நவம்பர் 07 – ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் – மும்பை – பிற்பகல் 2 மணி
நவம்பர் 11 – ஆஸ்திரேலியா – வங்கதேசம் – புனே – பிற்பகல் 2 மணி