SL vs AFG: கடைசி வரை போராடிய ரஷீத் கான்; 2 ரன்னில் சூப்பர் 4 சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 2 ரன்களில் தோல்வி அடந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், பதும் நிசாங்கா 41 ரன்னிலும், திமுத் கருணாரத்னே 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சதீர சமரவிக்ரமா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த சரித் அசலங்கா 36 ரன்னிலும், தனஞ்சயா டி சில்வா 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து ஒரு புறம் அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 84 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 92 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். கடைசியாக மதீஷா தீக்ஷனா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். துனித் வெல்லலகே 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 291 ரன்கள் குவித்தது.
Afghanistan vs Sri Lanka: குசால் மெண்டிஸ் அதிரடியால் இலங்கை 291 ரன்கள் குவிப்பு!
பின்னர் கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் ஜத்ரன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்பதின் நைம் 22 ரன்னிலும், ரஹ்மத் ஷா 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் குறைந்த ரன்களில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இல்லையென்றால், தொடரிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் தான்.
Bharat: இந்திய அணியின் ஜெர்சியில் பாரத் என்று பயன்படுத்த வேஎண்டும் – பிசிசிஐக்கு சேவாக் கோரிக்கை!
அந்த வகையில் அடுத்து வந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த முகமது நபி தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். அவர், 32 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். இதில், 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதுமட்டுமின்றி அதிவேகமாக அரைசதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
அதுவும் 24 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்புவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் முஜீப் உர் ரஹ்மான் 26 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு அபுதாபியில் அயர்லாந்துக்கு எதிராக 27 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 28 பந்துகளில் முகமது நபி அரைசதம் அடித்துள்ளார்.
அதன் பிறகு வந்த கரிம் ஜனத் 22 ரன்னிலும், நஜிபுல்லா ஜத்ரன் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக ரஷீத் கான் களமிறங்கினார். சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற கடைசி 7 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இதில், ரஷீத் கான் 3 பவுண்டரி அடித்துக் கொடுத்தார். எனினும், கடைசியாக ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முஜீப் உர் ரஹ்மான் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக ஆப்கானிஸ்தானின் சூப்பர் 4 சுற்று கனவு பறிபோனது. எனினும் இந்தப் போட்டியில் வெற்றி பெற ஆப்கானிஸ்தான் அணிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது.
கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் ஏன் இடம் பெற்றார்கள்? அஜித் அகர்கர் விளக்கம்!
ஆனால், கடைசியாக வந்த ஃபசல்ஹக் பாரூக்கி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கவே ஆப்கானிஸ்தான் 2 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை முதல் சூப்பர் 4 சுற்று போட்டி நடக்கிறது. இதில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லாகூர் மைதானத்தில் நடக்கிறது.