Bharat: இந்திய அணியின் ஜெர்சியில் பாரத் என்று பயன்படுத்த வேஎண்டும் – பிசிசிஐக்கு சேவாக் கோரிக்கை!
உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று பயன்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு புறம் இருக்க, நாடாளுமன்றத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றும் மசோதாவும் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் ஏன் இடம் பெற்றார்கள்? அஜித் அகர்கர் விளக்கம்!
ஜி20 மாநாட்டையொட்டி, செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவு விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், பாரத ஜனாதிபதி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற அழைப்பிதழ்களில் ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
South Africa Squad for World Cup 2023: உலகக் கோப்பை 2023 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு!
பாரத் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தான் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஜெர்சியில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று பயன்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். அசல் பெயரை ‘பாரத்’ அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற நீண்ட காலமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் வீரர்கள் தங்களது மார்பில் பாரத் இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை நான் கேட்டுக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
மேலும், பெயர் மாற்றங்களுக்கு உள்ளான நாடுகளின் பெயர்களை உதாரணத்திற்கு கூறியுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், நெதர்லாந்து ஹாலந்து என்ற பெயரில் பாரத் உலகக் கோப்பையில் விளையாட வந்தது. 2003 ஆம் ஆண்டில், நாங்கள் அவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் நெதர்லாந்தாக இருந்தனர், தொடர்ந்து அப்படித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை பர்மா மீண்டும் மியான்மர் என மாற்றியது. மேலும் பலர் தங்கள் அசல் பெயருக்கு திரும்பிவிட்டனர், என்று அவர் மேலும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்