உலகக் கோப்பை 2023 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா நடத்தும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடர் சென்னை, பெங்களூரு, புனே, மும்பை, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்படுகிறது.
உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியானது வரும் 5 ஆம் தேதி அகமதாபாத மைதானத்தில் தொடங்குகிறது. இதில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தான் உலகக் கோப்பை 2023 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஹென்ட்ரிக்ஸ் மார்கோ ஜான்சன், ஹென்ட்ரிச் கிளாசென், சிசாண்டா மகாலா, கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ஆன்ட்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷாம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென்
தென் ஆப்பிரிக்கா விளையாடும் போட்டிகள்:
அக்டோபர் 07 – தென் ஆப்பிரிக்கா – இலங்கை – டெல்லி – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 12 – தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா – லக்னோ – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 17 – தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து – தர்மசாலா – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 21 – தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து – மும்பை – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 24 – தென் ஆப்பிரிக்கா – வங்கதேசம் – மும்பை – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 27 – தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் – சென்னை – பிற்பகல் 2 மணி
நவம்பர் 01 – தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து – புனே – பிற்பகல் 2 மணி
நவம்பர் 05 – தென் ஆப்பிரிக்கா – இந்தியா – கொல்கத்தா – பிற்பகல் 2 மணி
நவம்பர் 10 – தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் – அகமதாபாத் – பிற்பகல் 2 மணி
World Cup 2023 India Squad: உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!
