உலகக் கோப்பை 2023 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முறையாகப் நடந்தது. இது ஒரு அணிக்கு 60 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடராக விளையாடப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் முதன்முறையாக 1987 இல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு அணிக்கு ஓவர்கள் எண்ணிக்கை 50 ஆகக் குறைக்கப்பட்டது. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரையில் 12 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டுள்ளது.

IND vs NEP:இந்திய வீரர்கள் மீதான கோபத்தை நேபாள் பந்து வீச்சாளர்கள் மீது காட்டி ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித் சர்மா

இதில், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 5 (1987, 1999, 2003, 2007, 2015) முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இங்கிலாந்து ஒரு முறை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்தியா 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறையும் (1975, 1979) உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

பிரஷித் கிருஷ்ணா, திலக் வர்மாவிற்கு இடம் உண்டா? இன்னும் சற்று நேரத்தில் உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு!

இந்த நிலையில், இந்த முறை இந்தியாவில் 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கும் உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இந்த ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

IND vs NEP: தார்பாய் கொண்டு வந்து திரும்ப கொண்டு சென்ற ஊழியர்கள்; நடுவரது செயலால் குஷியான ஹர்திக் பாண்டியா!

இந்த உலகக் கோப்பை தொடரானது, சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில். இந்த நிலையில், தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்

இந்தியா விளையாடும் போட்டிகள்:

அக்டோபர் 08 – இந்தியா – ஆஸ்திரேலியா – சென்னை – பிற்பகல் 2 மணி

அக்டோபர் 11 – இந்தியா – ஆப்கானிஸ்தான் – டெல்லி – பிற்பகல் 2 மணி

அக்டோபர் 14 – இந்தியா – பாகிஸ்தான் – அகமதாபாத் – பிற்பகல் 2 மணி

அக்டோபர் 19 – இந்தியா – வங்கதேசம் – புனே – பிற்பகல் 2 மணி

அக்டோபர் 22 – இந்தியா – நியூசிலாந்து – தர்மசாலா – பிற்பகல் 2 மணி

அக்டோபர் 29 – இந்தியா – இங்கிலாந்து – லக்னோ – பிற்பகல் 2 மணி

நவம்பர் 02 – இந்தியா – இலங்கை – மும்பை – பிற்பகல் 2 மணி

நவம்பர் 05 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – கொல்கத்தா - பிற்பகல் 2 மணி

நவம்பர் 12 – இந்தியா – நெதர்லாந்து – பெங்களூரு – பிற்பகல் 2 மணி

Scroll to load tweet…