பிரஷித் கிருஷ்ணா, திலக் வர்மாவிற்கு இடம் உண்டா? இன்னும் சற்று நேரத்தில் உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு!
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பிரஷித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.fw
இந்தியாவில் நடத்தப்படும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
Sri Lanka vs Afghanistan: இலங்கை – ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை: சூப்பர் 4 சுற்று யாருக்கு?
சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்த நிலையில், தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளனர். கண்டியில் உள்ள காங்கிரஸ் அரங்கில் வைத்து நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் வைத்து உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
சஞ்சு சாம்சன் மற்றும் பிரஷித் கிருஷ்ணா இருவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றவே இல்லை. இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் என்பதால், இந்த முறை உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக சீனியர் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Gautam Gambhir: நடுவிரலை காட்டியது ஏன்? கௌதம் காம்பீர் விளக்கம்!
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும் இறுதி நிமிடத்தில் அணிக்குள் நுழைய வாய்ப்பில்லை, ஏனெனில் அணியின் நிர்வாகம் நம்பர் 8 இல் திடமான ஆல் ரவுண்டரை வைத்திருக்க விரும்புகிறது. இதன் மூலமாக இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் மேம்படுத்தவே விரும்புகிறது. ஆகையால், ஆல்ரவுண்டர்களான அக்ஷர் படேல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உலகக் கோப்பைக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோருக்கும் அணியில் இடம் உண்டு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஆசிய கோப்பையில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தவிர உலகக் கோப்பை அணியில் எந்த மாற்றமும் தேர்வுக் குழு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.