கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் ஏன் இடம் பெற்றார்கள்? அஜித் அகர்கர் விளக்கம்!
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், குல்தீ யாதவ், அக்ஷர் படேல் ஆகியோர் இடம் பெற்றதற்கான காரணம் குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 10 மைதானங்களில் விளையாடுகின்றன.
South Africa Squad for World Cup 2023: உலகக் கோப்பை 2023 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு!
இதுவரையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா தான் 5 முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது. இந்தியா 2 முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த முறை இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடக்கும் நிலையில், இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்திக் பாண்டியா என்று 4 ஆல் ரவுண்டர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். மேலும், காயம் காரணமாக ஓய்வில் இருந்த கேஎல் ராகுல் உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றிருக்கிறார்.
குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றதற்கான காரணம் குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் சில வீரர்களுக்கு உடல் தகுதி பிரச்சனை இருந்தது. தற்போது காயத்திலிருந்து ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளனர். கேஎல் ராகுல் இந்திய அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார். அவர் உடல் தகுதி சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆதலால், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதே போன்று ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் இடது கை பேட்ஸ்மேன்கள் மற்றும் இடது கை பந்து வீச்சாளர்களும் கூட. இடது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் போது பந்தை உள்ளே எடுத்து வரக் கூடிய ஆற்றல் அவர்களிடம் இருக்கிறது.
World Cup 2023 India Squad: உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!
இருவரும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதன் மூலமாக இந்திய அணியின் பேட்டிங் பலம் அதிகரித்திருக்கிறது. குல்தீப் யாதவ் பந்தை வெளியில் எடுத்துச் செல்லக் கூடியவர். ஆதலால், அவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டியை விட ஒரு நாள் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்கள் பந்து வீசுகிறார்கள். எங்களிடம் இருக்கும் வீரர்களை வைத்து அணியை தேர்வு செய்திருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.