Afghanistan vs Sri Lanka: குசால் மெண்டிஸ் அதிரடியால் இலங்கை 291 ரன்கள் குவிப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கடைசி லீக் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழந்து 291 ரன்கள் குவித்துள்ளது.

Sri Lanka Scored 291 Runs against Afghanistan in 6th Match of Asia Cup 2023 at Lahore rsk

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. லாகூரில் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி, பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

 

இலங்கை:

பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ஹேமந்த் ரஜிதா, மத்தீஷா பதிரனா

Bharat: இந்திய அணியின் ஜெர்சியில் பாரத் என்று பயன்படுத்த வேஎண்டும் – பிசிசிஐக்கு சேவாக் கோரிக்கை!

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, குல்பதின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான், ஃபசல்ஹக் பாரூக்கி, முஜீப் உர் ரஹ்மான்

இதில், கருணாரத்னே 32 ரன்களில் ஆட்டமிழக்க, நிசாங்கா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடினார். ஆனால், சதீர சமரவிக்ரமா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த சரித் அசலங்கா நிதானமாக விளையாடினார். மெண்டிஸ் மற்றும் அசலங்கா இருவரும் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் அசலங்கா 36 ரன்களில் ஆட்டமிழக்க, தனஞ்சயா டி சில்வா 14 ரன்களிலும், கேப்டன் தசுன் ஷனாகா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் ஏன் இடம் பெற்றார்கள்? அஜித் அகர்கர் விளக்கம்!

மஹீஷ் தீக்‌ஷனா 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மெண்டிஸ் 92 ரன்களில் ரன் அவுட்டானார். இறுதியாக வந்த துணித் வெல்லலகே 33 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்துள்ளது.

பந்து வீச்சு தரப்பில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்பதின் நைம் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரஷீத் கான் 2 விக்கெட்டும், முஜீப் உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 292 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

South Africa Squad for World Cup 2023: உலகக் கோப்பை 2023 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios