Asianet News TamilAsianet News Tamil

MS Dhoni Bharat: பாரதியனாக மாறிய தோனி – வைரலாகும் இன்ஸ்டா புரோபைல் பிக்ஸர்!

இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு தோனி ஆதரவு தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

MS Dhoni Changed his Instagram DP to I am Blessed to be a Bharatiya is goes viral rsk
Author
First Published Sep 6, 2023, 4:09 PM IST

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு புறம் இருக்க, நாடாளுமன்றத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றும் மசோதாவும் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாண்டோவிற்குப் பதிலாக இடம் பெற்ற லிட்டன் தாஸ் – பாகிஸ்தான் வேகத்திற்கு தாக்குப் பிடிக்குமா வங்கதேசம்?

ஜி20 மாநாட்டையொட்டி, செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவு விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், பாரத ஜனாதிபதி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற அழைப்பிதழ்களில் ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸி, வீரர்கள் அறிவிப்பு!

பாரத் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஜெர்சியில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று பயன்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Pakistan vs Bangladesh: சூப்பர் 4 முதல் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் பலப்பரீட்சை!

தேசிய கொடியின் பின்னணியில் பாரதியனாக இருப்பதற்கு பாக்கியம் பெற்றேன் என்ற அவரது இன்ஸ்டாகிராம் புரோபைல் பிக்ஸரை பகிர்ந்து சிலர் சமூக வலைதளத்தில் பரப்பி வருகிகின்றனர். இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்திற்காக இந்தப் புகைப்படத்தை அவர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

India vs Pakistan: இந்தியா பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்காக கொழும்பு வந்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios