13 ஆண்டுகளுக்குப் பிறகு அமெக்க ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா!

அமெரிக்க்க ஓவன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

After 13 years, Rohan Bopanna entered into the US Open tennis final rsk

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி பிரான்ஸின் நிக்கோலஸ் மஹத், பியர் – ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது.

இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மழை: தானாக சிக்கிய பிசிசிஐ!

இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகன் போபண்ணா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முன்னதாக, காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எம்டன் ஜோடி, அமெரிக்காவின் நதானியேல் லாம்மன்ஸ் - ஜாக்சன் வித்ரோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

IND vs PAK: ஹர்திக் பாண்டியா ஷூ லேஸை கட்டிவிட்ட ஷதாப் கான்; பாராட்டு தெரிவித்து நடிகை இன்ஸ்டாவில் பதிவு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios