MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Ind Vs ZIM: இந்திய அணிக்கு ஆபத் பாண்டவராக மாறும் சேட்டன்..! மிடில் ஆர்டரில் களம் இறக்கப்படும் சஞ்சு

Ind Vs ZIM: இந்திய அணிக்கு ஆபத் பாண்டவராக மாறும் சேட்டன்..! மிடில் ஆர்டரில் களம் இறக்கப்படும் சஞ்சு

டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா, ஜிம்பாப்வே இடையேயான மிக முக்கியமான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 26 2026, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய அணியில் சஞ்சு சாம்சன்..?
Image Credit : Getty

இந்திய அணியில் சஞ்சு சாம்சன்..?

டி20 உலகக்கோப்பைத் தொடரின் முக்கிய கட்டத்தில் இந்திய அணி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் மெகா வெற்றியைப் பதிவு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அல்லது திலக் வர்மாவுக்கு பதிலாக சஞ்சு அணியில் சேர்க்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மோசமான ஃபார்மில் அபிஷேக்
Image Credit : Getty

மோசமான ஃபார்மில் அபிஷேக்

தொடருக்கு முன்பாக அதிரடி காட்டி வந்த தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இந்த தொடரில் மீண்டும் மீண்டும் சொதப்பி வருகிறார். 5 போட்டிகளில் களம் இறக்கப்பட்ட அவர் 3 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். காயம் காரணமாக ஒரு போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு களம் இறக்கப்பட்டார். இந்த போட்டியில் 8 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு ஆட்டம் இழந்தார். தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவர் களம் இறக்கப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Related Articles

Related image1
அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? ஜிப்பாப்வே உடன் இன்று வாழ்வா.. சாவா.. போட்டி
Related image2
சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சனா? தோனியின் ஓய்வு குறித்து வெளியான அதிரடித் தகவல்! ஐபிஎல் 2026 மெகா ஏலம் அப்டேட்!!
34
ஒன் டவுணில் சஞ்சு..
Image Credit : Getty

ஒன் டவுணில் சஞ்சு..

ஒன் டவுணின் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் இந்திய அணியில் ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பின்னர், இவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி வருகிறார். ஒருசில போட்டிகளில் சஞ்சு சிறப்பாக செயல்பட்டாலும் அவரது ஃபார்ம் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இதனால் அவரை ஒன் டவுண் அல்லது மிடில் ஆர்டரில் களம் இறக்க வேண்டுமென்கின்றனர்.

ரசிகர்களின் கோரிக்கைக்கு தகுந்தவாறு மிடில் ஆர்டரில் களம் இறக்கப்பட்டு வரும் திலக் வர்மா இந்த தொடர் முழுவதுமே மிகவும் மென்மையான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார். அவரது பேட்டிங்கில் மிகப்பெரிய ஸ்கோர் வரவில்லை. இதனால் திலக் வர்மாவுக்கு பதிலாக சஞ்சு களம் இறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

44
ரிங்குவுக்கு பதில் சஞ்சு..?
Image Credit : Getty

ரிங்குவுக்கு பதில் சஞ்சு..?

இந்தியாவின் பினிஷிங் ரோலை செய்து வரும் ரிங்கு சிங் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். தற்போது அந்த இடத்தில் சஞ்சு இறக்கப்படும் பட்சத்தில் பெரிய ஷாட்களை அடிக்கக் கூடிய பினிஷராக அவர் செயல்படுவார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணி
டி20 உலகக் கோப்பை
இந்தியா
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shreyanka Patil: மன அழுத்தம்.. கடைசில 'அந்த' முடிவு எடுத்தேன்.. மனம் திறந்த ஸ்ரேயங்கா பாட்டீல்!
Recommended image2
Vipraj Nigam: வீரர் செய்த தவறால் 10 ரன்கள் தண்டம் கட்டிய இந்தியா..! யார் இந்த விப்ராஜ் நிகம்
Recommended image3
Vaibhav Sooryavanshi: என்னை சின்ன பையன்னு நினச்சீங்களா..? இலங்கை வீரர்களுடன் மல்லுக்கட்டிய வைபவ்
Related Stories
Recommended image1
அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? ஜிப்பாப்வே உடன் இன்று வாழ்வா.. சாவா.. போட்டி
Recommended image2
சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சனா? தோனியின் ஓய்வு குறித்து வெளியான அதிரடித் தகவல்! ஐபிஎல் 2026 மெகா ஏலம் அப்டேட்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved