MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? ஜிப்பாப்வே உடன் இன்று வாழ்வா.. சாவா.. போட்டி

அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? ஜிப்பாப்வே உடன் இன்று வாழ்வா.. சாவா.. போட்டி

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற கட்டாயம் வெற்றி பெறவேண்டிய நிலையில் உள்ள இந்திய அணி இன்று சென்னை சேபாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 26 2026, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..?
Image Credit : X@BCCI

அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..?

இந்தியா, இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா அணி படு தோல்வியை சந்தித்த நிலையில் இந்திய அணியின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பு மங்கி உள்ளது. மீண்டும் இந்திய அணி அரையிறுதிக்கு நுழைய இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும் இந்த வெற்றி மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலோ அல்லது மிகப்பெரிய விக்கெட் வித்தியாசத்திலோ இருக்க வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்தியா..
Image Credit : Team India\BCCI

வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்தியா..

இன்றைய போட்டியில் மிகப்பெரிய வெற்றியை இந்தியா பதிவு செய்யும் பட்சத்தில் அடுத்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தினால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்து பிரிவிலும் இந்தியா முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும்.

Related Articles

Related image1
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Related image2
நியூசிலாந்திடம் மண்டியிட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து அவுட்.. பாகிஸ்தானுக்கும் சிக்கல்!
35
அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம்
Image Credit : X

அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம்

இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை உருவாக்கி உள்ளது. இந்த தொடரில் இந்தியா 5 போட்டிகளில் விளையாடிய நிலையில் அபிஷேக் சர்மா 3 முறை கோல்டன் டக் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். மீதமுள்ள இரு போட்டிகளிலும் கூட அவர் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை.

45
அதிரடி காட்டுவாரா திலக் வர்மா..?
Image Credit : X@BCCI

அதிரடி காட்டுவாரா திலக் வர்மா..?

இதனால் அபிஷேக் சர்மா மீதான விமர்சனம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறக்கப்படும் இஷான் கிஷன் சரியான பார்ட்னர்ஷிப் அமையாமல் ரன் சேர்க்க தடுமாறுவதைப் பார்க்க முடிகிறது. தொடருக்கு முன்பாக அதிரடி காட்டி வந்த திலக் வர்மா தற்போது பெயரளவுக்கு பேட்டிங் செய்து அவ்வபோது ரன்களை சேர்க்கிறார். மாறாக அவரிடம் இந்த தொடரில் பெரிய ஷார்ட்களை பார்க்க முடியவில்லை.

55
பிளேயிங் 11ல் சஞ்சு சாம்சன்..?
Image Credit : X@BCCI

பிளேயிங் 11ல் சஞ்சு சாம்சன்..?

பெவிலியனில் அமர வைக்கப்பட்டுள்ள வலதுகை பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை களம் இறக்கலாமென்றால் அவரது ஃபார்மும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இப்படி இடியாப்ப சிக்கலுக்கும் மேலாக சொதப்பல்களைச் சந்தித்து வரும் இந்திய அணி இன்று வெற்றியைப் பதிவு செய்யுமான என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி
இந்தியா
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
RCB vs GT: பிளே ஆஃப் 'கிங்' ரஜத் படிதார்! சிக்சர் மழை! தோனி, ரெய்னா வரிசையில் மெகா சாதனை!
Recommended image2
Sai Sudharsan: சாய் சுதர்சன் விசித்திர ஹிட் விக்கெட்! அவுட்டா? இல்லையா? கிரிக்கெட் விதி சொல்வது என்ன?
Recommended image3
RCB vs GT Qualifier 1: 254 ரன்கள் குவித்த ஆர்சிபி! புதிய வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி!
Related Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Recommended image2
நியூசிலாந்திடம் மண்டியிட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து அவுட்.. பாகிஸ்தானுக்கும் சிக்கல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved