இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மழை: தானாக சிக்கிய பிசிசிஐ!

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் மழையின் காரணமாக நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது

Rain May Affect India Matches in Super Fours of Asia Cup 2023, Pakistan may entered into Asia Cup Final 2023 rsk

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. கடந்த 6 ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டி நடந்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

IND vs PAK: ஹர்திக் பாண்டியா ஷூ லேஸை கட்டிவிட்ட ஷதாப் கான்; பாராட்டு தெரிவித்து நடிகை இன்ஸ்டாவில் பதிவு!

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் 2ஆவது போட்டி நாளை நடக்கிறது. இதில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், தான் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொழும்புவில் கன மழை எதிரொளி காரணமாக போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மழையின் காரணமாக போட்டி நடக்கவில்லை என்றால், பாகிஸ்தான் அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்று போட்டியில் முதல் வெற்றியை பெற்ற நிலையில், நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

ஆனால், இந்திய அணியில் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட பிசிசிஐ மறுப்பு தெரிவித்த நிலையில், தான் இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐயின் இந்த முடிவு தற்போது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது.

Pakistan vs Bangladesh: ஆட்டம் காட்டிய இமாம் உல் ஹக்; பாகிஸ்தான் சிம்பிள் வெற்றி!

பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடரை தனியாக நடத்த இருந்தது. ஆனால், பிசிசிஐ மறுப்பு தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் குரூப் பி பிரிவில் இடம் பெற்ற அணிகளுக்கு மட்டுமே பாகிஸ்தானில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிக்கவே இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டது. சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டிகளும் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.  

இந்த நிலையில் இலங்கையில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. மேலும், இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. தற்போது சூப்பர் 4 சுற்றின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் இலங்கையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பாரத் என்று பெயர் மாற்றினால், இந்தியாவை பாகிஸ்தான் உரிமை கொண்டாடுமா?

இந்த நிலையில், தான் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது சூப்பர் 4 சுற்றுப் போட்டி நாளை நடக்க உள்ளது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், போட்டி நடக்கும் மைதானத்தில் இதுவரையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் மாற்றவில்லை.

சூப்பர் 4 சுற்றில் மொத்தம் 6 போட்டிகள். இதில், ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 5 போட்டிகள் நடக்க உள்ளது. இந்த 5 போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில், தான் இந்த 5 நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், 5 போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது.

Pakistan vs Bangladesh: வங்கதேசத்திற்கு பயத்தை காட்டிய பாகிஸ்தான் ஹீரோஸ்: 193 ரன்களுக்கு ஆல் அவுட்!

அப்படி ரத்து செய்யப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாகிஸ்தான் முதல் சூப்பர் 4 சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறது. வங்கதேச தோல்வி அடைந்துள்ளது. எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்கள் பிடிக்கும். இதில் ஒரு அணி தான் டாஸ் மூலமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios