IND vs AUS: அக்ஷர் போன்று வாஷிங்டன் சுந்தருக்கு நடந்து விட்டால் எனன் செயவது? ரோகித் எடுத்த அதிரடி முடிவு!
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 2ஆவது ஒருநாள் போட்டி 24 ஆம் தேதியும், 3ஆவது ஒருநாள் போட்டி 27ஆம் தேதியும் நடக்கிறது.
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் புஜாராவுக்கு தடை: இங்கிலாந்து கட்டுப்பாட்டு வாரியம்!
ஏற்கனவே ஒரு நாள் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், உலகக் கோப்பையில் இடம் பெறாத ரவிச்சந்திரன் அஸ்வின், பிரசித் கிருஷ்ணா, ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், 18 மாதங்களாக ஒரு நாள் போட்டியில் இடம் பெறாத ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளார். நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்ட நிலையில், இறுதிப் போட்டியில் அவருக்குப் பதிலாக, வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றார். ஆனால், அவர் ஓவர் போடவில்லை.
ஒரு வேளை வாஷிங்டன் சுந்தருக்கும் காயம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று அணி நிர்வாகம் யோசித்து அதற்கு மாற்று ஏற்பாடாக ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்த்துள்ளது. இந்த முடிவு ஆசிய கோப்பை தொடரில் ஆட வாஷிங்க்டன் சுந்தரை அழைத்த போதே எடுக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 18 மாதங்களாக அணியில் இடம் பெறாத அஸ்வின், உலகக் கோப்பை தொடருக்கான அறிவிக்கப்படாத ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற டி20 தொடர்களிலும் பங்கேற்று வருகிறார்.
அக்ஷர் படேல் விளையாடாத நிலையில், வாஷிங்டன் சுந்தர் முதன்மை தேர்வாக இருப்பார். ஆனால், அவருக்கும் விளையாடாத நிலை ஏற்பட்டால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.