Asianet News TamilAsianet News Tamil

வாரணாசியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: 23ம் ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

வாரணாசியில் வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

PM Narendra Modi to lay the foundation of International Cricket Stadium of Rs 450 Crore at Ganjari area of Varanasi rsk
Author
First Published Sep 19, 2023, 8:00 PM IST | Last Updated Sep 19, 2023, 8:00 PM IST

வாரணாசி ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது இது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாக உருவாக உள்ளது. ஆம், வரும் 23 ஆம் தேதி வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Hangzhou Asian Games: ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் வெற்றி: கம்போடியாவை தோற்கடித்த இந்திய வாலிபால் டீம்!

கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

இந்த மைதானம் குறித்து உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் வரும் 2025 ஆண்டு முதல் காசி மக்கள் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் இந்த அடிக்கல் நாட்டு விழா தொடங்க உள்ளது. மேலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

IND vs AUS: அக்‌ஷர் போன்று வாஷிங்டன் சுந்தருக்கு நடந்து விட்டால் எனன் செயவது? ரோகித் எடுத்த அதிரடி முடிவு!

இது குறித்து பிரிவு ஆனையர் கவுஷல் ராஜ் சர்மா கூறியிருப்பதாவது: வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதான அடிக்கல் நாட்ட பிரதமரின் உத்தேச வருகைக்கான ஏற்பாடுகள் கஞ்சாரியில் தொடங்கப்பட்டுள்ளன. இது பிசிசிஐ நிர்வாகிகள், நட்சத்திரங்கள் தவிர பிரமாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும். கிரிக்கெட் வீரர்களும் விழாவில் பங்கேற்பார்கள்.

தற்போது நடைபெற்று வரும் காசி சன்சத் சமஸ்கிருதிக் மஹோத்சவின் சிறந்த கலைஞர்கள் முன்மொழியப்பட்ட விழாவில் நிகழ்த்துவார்கள் மற்றும் இந்த மஹோத்சவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அங்கு விநியோகிக்கப்படும். வாரணாசி மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் புஜாராவுக்கு தடை: இங்கிலாந்து கட்டுப்பாட்டு வாரியம்!

இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு ரூ.120 கோடி வரையில் செலவு செய்துள்ளது. "ஒரு 3D மாதிரியைத் தயாரித்தல் மற்றும் திட்டத்தின் விவரங்கள் விரைவில் முடிக்கப்படும், அதன் பிறகு எல் அண்ட் டி கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சமன் செய்து எல்லைச் சுவரைக் கட்டும் பணியைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

World Cup 2023: அமிதாப் பச்சன், சச்சினைத் தொடர்ந்து ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய ஜெய் ஷா!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios