Hangzhou Asian Games: ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் வெற்றி: கம்போடியாவை தோற்கடித்த இந்திய வாலிபால் டீம்!

இந்தியா மற்றும் கம்போட்டியா அணிகளுக்கு இடையிலான ஆசிய விளையாட்டு முதல் போட்டியில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

India Beat Cambodia by 3-0 in mens volleyball in Hangzhou Asian Games 2023 rsk

சீனாவில் ஹாங்சோவ் நகரில் வரும் 23 ஆம் தேதி ஆசிய விளையாடு போட்டிகள் தொடங்குகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே, கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் போட்டியானது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய விளையாட்டு போட்டியாக பார்க்கப்படுகிறது.

IND vs AUS: அக்‌ஷர் போன்று வாஷிங்டன் சுந்தருக்கு நடந்து விட்டால் எனன் செயவது? ரோகித் எடுத்த அதிரடி முடிவு!

இதுவரையில், இந்தியா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 672 பதக்கங்களை வென்று 5 ஆவது இடத்தில் உள்ளது. ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் இந்தியா மற்றும் கம்போடியா அணிகள் மோதின. இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் முதல் 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றனர்.

கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் புஜாராவுக்கு தடை: இங்கிலாந்து கட்டுப்பாட்டு வாரியம்!

அதாவது, 25-14, 25-13 மற்றும் 25-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதே போன்று நடந்து வரும் கால்பந்து போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் விளையாடி வருகின்றன. இதில், போட்டி தொடங்கிய முதல் 17ஆவது நிமிடத்தில் சீனா முதல் கோல் அடித்தது. அதன் பிறகு முதல் அரை மணி நேரத்தில் இந்திய அணி கோல் அடிக்கவே இல்லை. பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆடிய இந்தியா 47ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தது. அதன் பிறகு மீண்டும் சீனா அடுத்தடுத்து கோல் அடிக்கவே 4-1 என்று முன்னிலை பெற்று விளையாடி வருகிறது

World Cup 2023: அமிதாப் பச்சன், சச்சினைத் தொடர்ந்து ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய ஜெய் ஷா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios