சச்சின், ஜாகீர் கான் உள்பட 3 முறை டக் அவுட்டில் வெளியேறிய கிரிக்கெட் பிரபலங்கள் யார் யா?

சச்சின் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் ஒரு நாள் போட்டிகளில் டக் அவுட்டில் வெளியேறியிருக்கின்றனர்.
 

Not only Suryakumar Yadav, Sachin Tendulkar, Jasprit Bumrah are also three consecutive duck out in ODIs

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதில், மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் குவித்தார். இதே போன்று டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு ரன் எடுத்து கொடுக்க ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது.

அக்‌ஷர் படேலை மின்னல் வேகத்தில் படுத்துக் கொண்டே ரன் அவுட் செய்த ஸ்டீவ் ஸ்மித்!

இதையடுத்து 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தாது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தன் பங்கிற்கு 54 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 40 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும், ஷமி 14 ரன்னிலும் வெளியேறினர்.  முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் கோல்டன் டக் முறையில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறிய சூர்யகுமார் யாதவ் இந்த 3 ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஷ்டன் அகர் பந்தில் கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்தார்.

2009, 2019, 2023 - 4 ஆண்டுகளுக்குப் பிறகு 3 ஆவது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

அதுமட்டுமின்றி தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் கோல்டன் டக்கில் வெளியேறிய 6ஆவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார். இத்தனைக்கும் டி20 போட்டியில் நம்பர் ஒன் பிளேயர் கூட. அவுட்டான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே மைதானத்திலேயே நின்றுள்ளார். மேலும், அவருக்கு நேரம் சரியில்லை, இப்படியொரு சோதனை வர வேண்டுமா? அவரது நிலையில் இருந்து பார்த்தால் தான் அவரது மன நிலை தெரிய வரும் என்றெல்லாம் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தங்களுக்குள்ளாக பேசினர்.

ஐபிஎல் 2023 தொடரில் புதிய ரூல்ஸ் அமல்: டாஸ்க்கு பிறகு பிளேயிங் 11 தேர்வு செய்யலாம்; டெட் பால், பெனால்டி உண்டு!

ஆனால், இதற்கு முன்னதாக இந்திய ஜாம்பவன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் (1994 ஆம் ஆண்டு) கூட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார். அவர் மட்டுமின்றி அனில் கும்ப்ளே (1996 ஆம் ஆண்டு), ஜாகீர் கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017 - 2019) ஆகியோர் 3 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிட்டு விரட்டுனா இங்கிட்டு வருது, இங்கிட்டு விரட்டுனா அங்கிட்டு போகுது - படாதபாடு பட்டு விரட்டிய பாதுகாவலர்

எனினும், இந்த 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி தொடரையும் இழந்தது. அதுமட்டுமின்றி 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து ஒரு நாள் தொடர்களில் வெற்றி வாகை சூடிய இந்திய அணியின் தொடர் சாதனையை தற்போது ஆஸ்திரேலியா முறியடித்துள்ளது. மேலும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா 3ஆவது முறையாக இந்தியாவில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios