அக்‌ஷர் படேலை மின்னல் வேகத்தில் படுத்துக் கொண்டே ரன் அவுட் செய்த ஸ்டீவ் ஸ்மித்!

இந்தியா பேட்டிங் செய்த போது, போட்டியின் 29 ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார் வீசிய பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடிய அக்‌ஷர் படேலை ஸ்டீவ் ஸ்மித் படுத்துக் கொண்டே ரன் அவுட் செய்து அசத்தியுள்ளார்.
 

Steven Smith runs out Axar Patel video goes viral

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதில், மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் குவித்தார். இதே போன்று டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு ரன் எடுத்து கொடுக்க ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தாது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 32 ரன்களில் வெளியேறினார்ல். அதன் பிறகு விராட் கோலியுடன், அக்‌ஷர் படேல் இணைந்தார். ஆனால், அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. போட்டியில் 28.5ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார் வீசினார். அவரது பந்தை மிட்விக்கெட் திசையில் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடி வந்த போது, கோலி, ஸ்டீவ் ஸ்மித் பந்தை எடுப்பதை பார்த்து வேண்டாம் வேண்டாம் என்று கூறியும், அவர் பாதி தூரத்திற்கு வந்த நிலையில், அவரால் திரும்பி செல்ல முடியவில்லை.

எனினும், முயற்சித்தார். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் படுத்துக் கொண்டே பந்தை தடுத்த நிலையில், எழுந்து, திரும்பி பந்தை வீசுவதற்குள்ளாக அக்‌ஷர் படேல் வந்துவிடுவார் என்று கருதிய அவர், படுத்திருந்த நிலையிலேயே பந்தை கீப்பர் திசைக்கு வீசியுள்ளார். இதை சுதாரித்துக் கொண்ட விக்கெட் கீப்பர் கேரி, கச்சிதமாக பிடித்து ரன் அவுட் செய்துள்ளார். ஸ்மித்தின் இந்த ரன் அவுட் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios