2009, 2019, 2023 - 4 ஆண்டுகளுக்குப் பிறகு 3 ஆவது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 4 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியுள்ளது. 
 

Australia is the champion for the 3rd time after 4 years against India in ODI Series

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதில், மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் குவித்தார். இதே போன்று டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு ரன் எடுத்து கொடுக்க ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் 2023 தொடரில் புதிய ரூல்ஸ் அமல்: டாஸ்க்கு பிறகு பிளேயிங் 11 தேர்வு செய்யலாம்; டெட் பால், பெனால்டி உண்டு!

இதையடுத்து 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தாது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தன் பங்கிற்கு 54 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 40 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும், ஷமி 14 ரன்னிலும் வெளியேறினர்.  முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் கோல்டக் டக் முறையில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறிய சூர்யகுமார் யாதவ் இந்த 3 ஆவது ஒரு நாள் போட்டியிலும் ஆஷ்டன் அகர் பந்தில் கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்தார். 

அங்கிட்டு விரட்டுனா இங்கிட்டு வருது, இங்கிட்டு விரட்டுனா அங்கிட்டு போகுது - படாதபாடு பட்டு விரட்டிய பாதுகாவலர்

அதுமட்டுமின்றி தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் கோல்டன் டக்கில் வெளியேறிய முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார். இத்தனைக்கு டி20 போட்டியில் நம்பர் ஒன் பிளேயர் கூட. இறுதியாக இந்தியா 248 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

4 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்:

இந்தியாவுக்கு எதிராக கடைசி போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 4 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக 2009, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரை கைப்பற்றி இந்தியாவின் தொடர் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தொடர்ந்து 3ஆவது முறையாக கோல்டன் டக்கில் வெளியேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

சென்னையின் 50ஆவது போட்டி:

சென்னையில் நடந்த 50ஆவது சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. அதோடு, சென்னையில் மட்டும் இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.

ஒருநாள் கிரிக்கெட் நம்பர் 1 அணி:

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஐசிசி ஆண்கள் ODI அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ஆடம் ஜம்பா ஆட்டநாயகன் விருது பெற்றார். மிட்செல் ஸ்டார்க் தொடர் நாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 5ஆவது வெற்றி; டெஸ்ட், ODI கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios