Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் 5ஆவது வெற்றி; டெஸ்ட், ODI கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றிய ஆஸ்திரேலியா ஆண்கள் ODI அணிகளின் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.
 

after won the India Series, Australia became the No.1 ranked ODI team in the world
Author
First Published Mar 22, 2023, 11:34 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதில், மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் குவித்தார். இதே போன்று டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு ரன் எடுத்து கொடுக்க ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது.

3ஆவது போட்டியில் வெற்றி; சென்னையில் கோட்டை கட்டிய ஆஸ்திரேலியா; 4 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி ஆஸி, சாதனை!

இதையடுத்து 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தாது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தன் பங்கிற்கு 54 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 40 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும், ஷமி 14 ரன்னிலும் வெளியேறினர்.  முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் கோல்டக் டக் முறையில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறிய சூர்யகுமார் யாதவ் இந்த 3 ஆவது ஒரு நாள் போட்டியிலும் ஆஷ்டன் அகர் பந்தில் கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்தார்.

தொடர்ந்து 3ஆவது முறையாக கோல்டன் டக்கில் வெளியேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

அதுமட்டுமின்றி தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் கோல்டன் டக்கில் வெளியேறிய முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார். இத்தனைக்கு டி20 போட்டியில் நம்பர் ஒன் பிளேயர் கூட. இறுதியாக இந்தியா 248 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா சென்னையில் அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் சேர்த்து 50ஆவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு, சென்னையில் மட்டும் இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.

அங்கிட்டு விரட்டுனா இங்கிட்டு வருது, இங்கிட்டு விரட்டுனா அங்கிட்டு போகுது - படாதபாடு பட்டு விரட்டிய பாதுகாவலர்

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஐசிசி ஆண்கள் ODI அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருத்தர் கூட 50 ரன்கள் அடிக்கல, ஆனாலும், 269 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா 2ஆவது இடம்!

after won the India Series, Australia became the No.1 ranked ODI team in the world

Follow Us:
Download App:
  • android
  • ios