BAN vs NZ 2nd Test: கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர் பொறுப்பான ஆட்டம் – 2ஆவது டெஸ்டில் நியூசி., வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டாக்காவில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி 180 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியானது 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக ஜாகிர் ஹசன் 59 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
MI அணியில் கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, சொதப்பியதால் வெளியேற்றப்பட்ட வீர்ரகள் யார் யார்?
பின்னர், 138 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி விளையாடியது. இதில், தொடக்க வீரர்கள் டாம் லாதம் 26 ரன்களும், டெவான் கான்வே 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 11, ஹென்ரி நிக்கோலஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, டேரில் மிட்செல் களமிறங்கி 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். டாம் லாதம் 2 ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக கிளென் பிலிப்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் இருவரும் களமிறங்கி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இதில், பிலிப்ஸ் 40 ரன்களும், சாண்ட்னர் 35 ரன்களும் எடுக்கவே நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சிக்குழு தலைவராக சஞ்சய் பங்கர் நியமனம்!