MI அணியில் கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, சொதப்பியதால் வெளியேற்றப்பட்ட வீர்ரகள் யார் யார்?
மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், தொடரில் சொதப்பியதால், வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலில் யுவராஜ் சிங்கும் இடம் பெற்றிருக்கிறார்.
mumbai indians
ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்று சொல்லப்படும் பிசிசிஐ மூலமாக இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியனானது. கடைசியாக இந்த ஆண்டு நடந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5ஆவது முறையாக சாம்பியனானது.
Mumbai Indians
இந்த நிலையில், வரும் 19 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடக்க இருக்கிறது. முதல் முறையாக துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இதுவரையில் நடந்த 16 ஐபிஎல் சீசன்களின் படி மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு, சொதப்பிய வீரர்களின் பட்டியலில் யுவராஜ் சிங்கும் இடம் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
Mumbai Indians
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளில் மொத்தமாக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். காயம் காரணமாக பல போட்டிகளில் ஆர்ச்சர் இடம் பெறாத நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
MI IPL 2024
ரிச்சர்டு லெவி:
கடந்த 2012 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.2.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு லெவி. இவர், 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 83 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
Mumbai Indians IPL 2024 Auction
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்:
ஐபிஎல் 2011 ஆம் ஆண்டு ஏலத்தில் ரூ.3.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். இவர் 11 போட்டிகளில் விளையாடி 135 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
Mumbai Indians IPL 2024 Auction Dubai
டிம் சவுதி:
கடந்த 2016 ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 329 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார்
Yuvraj Singh Mumbai Indians
யுவராஜ் சிங்:
கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் யுவராஜ் சிங். அந்த சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 98 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக அடுத்த சீசனில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் 132 போட்டிகளில் விளையாடி 2750 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 36 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
Mumbai Indians
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளில் மொத்தமாக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். காயம் காரணமாக பல போட்டிகளில் ஆர்ச்சர் இடம் பெறாத நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Ricky Ponting
ரிக்கி பாண்டிங்:
ஆஸ்திரேலியா வீரரான ரிக்கி பாண்டிங் ரூ.2.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த சீசனில் அவர் 5 போட்டிகளில் 52 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.