வரும் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட்டிற்கு வரலாற்றிலேயே முதல் முறையாக நேபாள் அணி தகுதி பெற்றுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடரின் 16ஆவது சீசன் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு குழுவிலும், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு அணியிலும் இடம் பெற்றுள்ளன.

விராட் கோலி காலில் விழுந்து வணங்கிய ரசிகர்: அவரை தூக்கி கட்டியணைத்த கிங்!

Scroll to load tweet…

Scroll to load tweet…

நேபாள் தலைநகர் காத்மண்டுவில் ஏசிசி பிரீமியர் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இதில், வெற்றி பெறும் அணி பாகிஸ்தானில் நடக்க உள்ள ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும். அதன்படி ஏசிசி பிரீமியர் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. நேற்று காத்மண்டுவில் பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் நேபாள் ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்கு ஆவலுடன் மைதானத்திலேயே காத்திருந்தனர். எனினும், மழை விடாமல் பெய்த நிலையில், நேபாள் கிரிக்கெட் சங்கம் போட்டியை மீண்டும் இன்று நடத்தியது.

விராட் கோலிக்கு முழு சம்பளம் ரூ.1.07 கோடி, கவுதம் காம்பீருக்கு முழு சம்பளம் ரூ.25 லட்சம் அபராதம்!

திரிபுவன் பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய யுஏஇ அணி 27.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து தடுமாறியது. அப்போது மழை குறுக்கிட்டுதால் போட்டி தடைபட்டது. கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. இதில், UAE அணி ஆடியது. கடைசியாக அந்த அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நீ என்ன கொடுக்குறாயோ அதுதான் திரும்ப கிடைக்கும்; பெங்களூருவில் காம்பீர் கொடுத்ததை திரும்ப கொடுத்த விராட் கோலி!

Scroll to load tweet…

இதில் அதிகபட்சமாக ஆசிப் கான் 46 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் ராஜ்பஷி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கரண் கேசி மற்றும் லாமிச்சனே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய நேபாள் அணிக்கு குல்சன் ஜா அதிரடியாக ஆடி 67 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். பீம் சர்கி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023: சும்மா கத்திக்கிட்டே இருக்க கூடாது; கம்முன்னு இருக்கணும்: ரசிகர்களை எச்சரித்த காம்பிர்!

இதன் மூலமாக வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை தொடரின் 16ஆவது சீசனில் முதல் முறையாக நேபாள் அணி தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அடுத்தபடியாக நேபாள் அணி இணைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

Scroll to load tweet…