Asianet News TamilAsianet News Tamil

நீ என்ன கொடுக்குறாயோ அதுதான் திரும்ப கிடைக்கும்; பெங்களூருவில் காம்பீர் கொடுத்ததை திரும்ப கொடுத்த விராட் கோலி!

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் கவுதம் காம்பீர் என்ன சைகை செய்தாரோ அதே போன்று, லக்னோ மைதானத்தில் ஆர்சிபி வீரர் விராட் கோலி செய்து அதனை திரும்ப கொடுத்துள்ளார்.

RCB Player Virat Kohli gives Exact reply in Lucknow to Gautam Gambhir who gave Gesture in Bengaluru
Author
First Published May 2, 2023, 10:29 AM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது போட்டி தற்போது லக்னோவில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 31 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஒற்றைப்படையில் ஆட்டமிழந்தனர்.

IPL 2023: சும்மா கத்திக்கிட்டே இருக்க கூடாது; கம்முன்னு இருக்கணும்: ரசிகர்களை எச்சரித்த காம்பிர்!

பின்னர் எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். காயம் காரணமாக பீல்டிங் செய்யாமல் வெளியேற லக்னோ அணியின் யாஷ் தாக்கூருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் பதோனி தொடக்க வீரராக களமிறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்ணல் பாண்டியா ஹாட்ரிக் பவுண்டரி அடித்த நிலையில், சிக்ஸருக்கு அடிக்க முயற்சித்து விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மளமளவென சரிந்த விக்கெட்; கிருஷ்ணப்பா கௌதம் 23, அமித் மிஷ்ரா 19 ரன்கள்; கேஎல் ராகுல் கடைசில வந்தும் பலனில்லை!

மேக்ஸ்வெல் தனது முதல் ஓவரிலேயே குர்ணல் பாண்டியா விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து இம்பேக்ட் பிளேயர் ஆயுஷ் பதோனி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து தீபக் கூடா ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அவர் ஒரேயொரு ரன் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு நிக்கோலஸ் பூரன் 9, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 13, கிருஷ்ணப்பா கௌதம் 23, ரவி பிஷ்னாய் 5, நவீன் உல் ஹாக் 13, அமித் மிஷ்ரா 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த கேஎல் ராகுல் களத்தில் இருந்தார்.

அப்படி என்னத்த கிழிச்சிட்டாருன்னு இவர டீமுல வச்சிருக்காங்க? தீபக் கூடா மொத்தமே 53 ரன்னு தான்!

இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 2ஆவது முறையாக குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 135 ரன்களை சேஷிங் செய்ய முடியாமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோல்வியடைந்தது.

ஒவ்வொரு ரன்னாக ஓடி ஓடி எடுத்த ஆர்சிபி: ஆறுதல் கொடுத்த பாப் டூப்ளெசிஸ்: மொத்தமே 2 சிக்ஸர், 6 பவுண்டரி தான்!

இந்த நிலையில் தான் பெங்களூருவில் நடந்த போட்டியின் போது லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆர்சிபி ஆர்சிபி என்று ரசிகர்கள் கோஷமிட்ட நிலையில், சும்மா கத்திக்கிட்டே இருக்க கூடாது, என்று சைகை மூலமாக வாயில் விரல் வைத்து லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் சுட்டிக்காட்டினார். அதே பாணியில் நேற்று, லக்னோ மைதானத்தில் லக்னோவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலி சைகை மூலமாக தரமாக செய்து காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு, மைதானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டியின் முழு சம்பளமான ரூ.1.07 கோடி அபராதமும், கவுதம் காம்பீருக்கு போட்டியின் முழு சம்பளமான ரூ.25 லட்சமும், நவீன் உல்ஹாக் போட்டியி சம்பளத்திலிருந்து 50 சதவிகிதமும் (1.79 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios