Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: சும்மா கத்திக்கிட்டே இருக்க கூடாது; கம்முன்னு இருக்கணும்: ரசிகர்களை எச்சரித்த காம்பிர்!

பெங்களூரு அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த அணியின் ஆலோசகர் கவுதம் காம்பிர் சும்மா கத்திக்கிட்டே இருக்க கூடாது கம்முன்னு இருக்கனும் என்று வாயில் விரலைத்து ரசிகர்களுக்கு சைகை செய்துள்ளார்.

Gautham Gambhir warned the RCB fans by putting his finger in his mouth after LSG Won in Bangalore Match
Author
First Published Apr 11, 2023, 12:02 PM IST | Last Updated Apr 11, 2023, 12:02 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் பரப்பரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், த்ரில்லாகவும் இருக்கிறது. குஜராத் போட்டியில் கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. அதே போன்று ஆர்பிசி போட்டியில் லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

IPL 2023: இதுவரையில் ஆர்சிபியை பொளந்து தள்ளிய கேஎல் ராகுல்: டாப் ஸ்கோரே 132 தான்!

அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 21 ரன்னும், மேக்ஸ்வெல் 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாப் டூபிளெசிஸ் 79 ரன்னுடன் களத்தில் இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு மேயர்ஸ் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தீபக் கூடா 9 ரன்னில் வெளியேறினார். குர்னல் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து லக்னோ அணி தடுமாறியது. அதன் பிறகு தான் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர், ஆர்சிபி பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார்.

IPL 2023: நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிர்செல் மார்ஷ்;மனைவிக்கு முத்தம் கொடுத்து கட்டியணைத்த டெல்லி வீரர்!

ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ராகுலும் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவர் தொடர்ந்து 8, 20, 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், நேற்றைய போட்டியில் 18 ரன்களில் வெளியேறினார். இதுவரையில் லக்னோ ஆடிய 4 போட்டிகளில் மொத்தமாக 81 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

இவர்களைத் தொடர்ந்து அதிரடி நாயகன் நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். களமிறங்கிறது முதல் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். 15 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் நிக்கோலஸ் பூரனும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக கேஎல் ராகுல் 14 பந்துகளில் அரைசதம், பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரைசதம், யூசுப் பதான் 15, சுனில் நரைன் 15 மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.

IPL 2023: தோனியின் காலில் விழுந்து வணங்கிய மைதான ஊழியர்: வைரலாகும் புகைப்படம்!

ஒரு கட்டத்தில் லக்னோவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் பூரன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க் வுட்டும் சொல்லும்படி ஒன்றுமில்லை. கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த இம்பேக்ட் பிளேயர் ஆயுஷ் பதானி சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஹிட் விக்கெட் முறையில் வெளியேறினார். ஆனால், அவர் அடித்தது சிக்சர் தான். இதையடுத்து கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 2 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது 5ஆவது பந்தில் உனத்கட் ஆட்டமிழந்தார். கடைசியில் ஆவேஷ் கான் களமிறங்கினார். கடைசி பந்தில் பைஸ் முறையில் ஒரு ரன் கிடைக்க, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி ஆர்சிபி ரசிகர்களும் இன்றைக்கு வெற்றி உறுதி என்று இருந்த நிலையில், கடைசி பந்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றியை உறுதி செய்தது. எனினும், மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்சிபி ஆர்சிபி என்றே கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் ரசிகர்களைப் பார்த்து சும்மா கத்திக்கிட்டே இருக்க கூடாது, கம்முன்னு இருக்க வேண்டும் என்ற பாணியில் வாயில் விரலை வைத்து சைகை செய்தார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெங்களூரு ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

IPL 2023: கள்ளச்சந்தையில் ஜோராக நடக்கும் டிக்கெட் விற்பனை; ஒரு டிக்கெட் ரூ.5000க்கு விற்பனை!

சொந்த மண்ணில் மும்பையை அலற வைத்த பெங்களூரு அணி லக்னோ அணியிடம் சரணடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த வெற்றியின் மூலமாக 4 போட்டிகளில் விளையாடிய லக்னோ அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios