மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மைதான ஊழியர் ஒருவர் தோனியின் காலை தொட்டு வணங்கிய புகைப்படம் ஒன்றூ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதில், நேற்று முன் தினம் மும்மை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இதில், இஷான் கிஷான் மட்டும் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

Scroll to load tweet…

Scroll to load tweet…

இதில், சென்னை அணியில் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, சான்ட்னர் ஆகியோர் 2 விக்கெட்டுகள் கைப்பற்ற மகாளா ஒரு விக்கெட் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே டக் அவுட்டில் வெளியேறினார். அதன் பிறகு இணைந்த ரஹானே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை சரமாறிய வெளுத்து வாங்கினர். இறுதியாக ரஹானே 61 ரன்களில் வெளியேற, அம்பத்தி ராயுடு 20 ரன்னுடனும், ருத்துராஜ் கெய்க்வாட் 40 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பிறகு மைதான ஊழியர்கள் பலரும் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஒரு ஊழியர் தோனியின் காலை தொட்டு வணங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடக்க விழாவின் போது பின்னணி பாடகரான அர்ஜித் சிங் தோனியின் காலை தொட்டு வணங்கியுள்ளார். அப்போது ராஷ்மிகா மந்தனா, தமன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

தற்போது வரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. வரும் 12 ஆம் தேதி சென்னை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னையில் நடக்கிறது. 

Scroll to load tweet…