IPL 2023: நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிர்செல் மார்ஷ்;மனைவிக்கு முத்தம் கொடுத்து கட்டியணைத்த டெல்லி வீரர்!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் மிட்செல் மார்ஷ், நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
மிட்செல் மார்ஷ் - கிரேட்டா மேக் திருமணம்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான போட்டியில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 3 போட்டியில் விளையாடி மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. முதல் 2 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் வீரர், 3ஆவது போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரோவ்மன் பவல் அணியில் இடம் பெற்றார். மிட்செல் மார்ஷ் திருமணம் காரணமாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார்.
மிட்செல் மார்ஷ் - கிரேட்டா மேக் திருமணம்
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், மிட்செல் மார்ஷ் தனது நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவரும் ஆஸ்திரேலியாவின் கிரேஸ்டவுன் பகுதிக்குச் சென்று ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டனர். அதன் பிறகு இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மிட்செல் மார்ஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிட்செல் மார்ஷ் - கிரேட்டா மேக் திருமணம்
கிரேட்டா மேக் ஒரு துணை இயக்குநர். கிரேட்டா மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். மொன்டானா மாநில பல்கலைக்கழகத்தில் சர்வதேச எக்சேஞ்ச் புரோகிராம் படித்து முடித்துள்ளார். அவர் மார்கரெட் ரிவர் நிறுவனத்தின் இணை இயக்குநர்களில் ஒருவராகவும், அவரது குடும்ப வணிகத்தின் வெளிநாட்டு செயல்பாடுகளிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 11 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும், 15 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் டெல்லி கேபிடல்ஸ் எதிர்கொள்கிறது.