விராட் கோலிக்கு முழு சம்பளம் ரூ.1.07 கோடி, கவுதம் காம்பீருக்கு முழு சம்பளம் ரூ.25 லட்சம் அபராதம்!
லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டியின் முழு சம்பளமும் ரூ.1.07 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 31 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஒற்றைப்படையில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கௌதம் அதிகபட்சமாக 23 ரன்கள் சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று அமித் மிஷ்ராவும் தன் பங்கிற்கு 19 ரன்கள் குவித்தார். நவீன் உல் ஹாக் 13 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, கடைசி வரை போராடிய லக்னோ 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
போட்டி முடிந்த பிறகு தான் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது. லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது விராட் கோலி ஷு காலை தூக்கி காட்டி தன்னை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டார் என்று லக்னோ வீரர் நவீன் உல் ஹாக் நடுவரிடம் குற்றம் சாட்ட்னார். இதனால், நடுவர், விராட் கோலியை அழைத்து அறிவுறுத்தினார். இதன் காரணமாக விராட் கோலி ஆத்திரமடைந்தார்.
IPL 2023: சும்மா கத்திக்கிட்டே இருக்க கூடாது; கம்முன்னு இருக்கணும்: ரசிகர்களை எச்சரித்த காம்பிர்!
அதுமட்டுமின்றி விராட் கோலி ஒவ்வொரு கேட்சாக பிடிக்கும் போது கூட மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். அப்போது, கவுதம் காம்பீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி சைகை மூலமாக செய்து காட்டினார். அதோடு, போட்டி முடிந்த பிறகும் கூட விராட் கோலி, லக்னோ வீரர் கைல் மேயர்ஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த காம்பீர், மேயர்ஸை பிரச்சனை ஏதும் வேண்டாம் என்று கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
இதையடுத்து, விராட் கோலியின் கவனம் முழுவதும் காம்பீர் பக்கமாக திரும்பியது. ஏற்கனவே தன்னை விமர்சனம் செய்ததால் கோபத்தில் இருந்த காம்பீர், கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மற்ற வீரர்கள் அனைவரும் சூழந்து மோதலை தடுக்க முற்பட்டனர். ஆனால், அதில் எந்த பலனும் இல்லாத நிலையில், அமித் மிஷ்ரா மற்றும் விஜய் தாஹியா ஆகியோர் விராட் கோலியை விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்த சம்பவம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்படி என்னத்த கிழிச்சிட்டாருன்னு இவர டீமுல வச்சிருக்காங்க? தீபக் கூடா மொத்தமே 53 ரன்னு தான்!
இந்த நிலையில், தான் விராட் கோலி, கவுதம் காம்பீர் மற்றும் நவீன் உல் ஹாக் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, விராட் கோலியின் முழு சம்பளமும் ரூ.1.07 கோடியும், கவுதம் காம்பீரின் முழு சம்பளம் ரூ.25 லட்சம் மற்றும் நவீன் உல் ஹாக்கிற்கு போட்டியின் பாதி சம்பளம் ரூ.1.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டி விதிமுறைகளை மீறி நடந்ததாக விராட் கோலிக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக விராட் கோலி ஆக்ரோஷமாக நடந்து கொண்ட நிலையிலும், அவர் கேப்டனாக இருந்த நிலையில், தாமதமாக பந்து வீசிய நிலையிலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.