விராட் கோலி காலில் விழுந்து வணங்கிய ரசிகர்: அவரை தூக்கி கட்டியணைத்த கிங்!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மைதானத்திற்குள் வந்த ரசிகர் ஒருவர் விராட் கோலி காலில் விழுந்து வணங்கினார்.

Fan Touched Virat Kohli Feet in Lucknow during RCB vs LSG Match

நேற்று லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 43ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணியில் பாப் டூப்ளெசிஸ் 44 ரன்கள் குவித்தார். விராட் கோலி 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

விராட் கோலிக்கு முழு சம்பளம் ரூ.1.07 கோடி, கவுதம் காம்பீருக்கு முழு சம்பளம் ரூ.25 லட்சம் அபராதம்!

 

 

இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் காயம் காரணமாக கேஎல் ராகுல் வரவில்லை. மாறாக கைல் மேயர்ஸ் உடன், ஆயுஷ் பதோனி களமிறங்கினார். எனினும் மேயர்ஸ் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கௌதம் 23 ரன்கள் எடுத்து ரன் அவுட் செய்யப்பட்டார். அமித் மிஷ்ரா 19 ரன்களில் வெளியேறினார். இறுதியாக லக்னோ அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நீ என்ன கொடுக்குறாயோ அதுதான் திரும்ப கிடைக்கும்; பெங்களூருவில் காம்பீர் கொடுத்ததை திரும்ப கொடுத்த விராட் கோலி!

 

 

இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றதன் மூலமாக 9 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது. விராட் கோலி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மைதானத்திற்குள் வந்த ரசிகர் ஒருவர் அவரது காலில் விழுந்து வணங்கினார். அதன் பிறகு விராட் கோலி அவரை தூக்கி கட்டியணைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

IPL 2023: சும்மா கத்திக்கிட்டே இருக்க கூடாது; கம்முன்னு இருக்கணும்: ரசிகர்களை எச்சரித்த காம்பிர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios