IPL 2023: கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல; தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ரோகித் சர்மா!
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சொதப்பி வரும் ரோகித் சர்மா நேற்றைய போட்டியிலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று பெங்களூருவில் நடந்த போட்டியில், டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற டூ பிளசிஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. இந்த நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
IPL 2023: ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 அரை சதங்கள் அடித்த ஷிகர் தவானை முந்திய கிங் விராட் கோலி!
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பேட்டிங்கில் சொதப்பி வந்த ரோகித் சர்மா நேற்றைய போட்டியிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் ஒரு ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து 2 முறை ரன் அவுட் மற்றும் கேட்ச் கண்டத்திலிருந்த தப்பித்த ரோகித் சர்மா 3ஆவது முறையாக சிக்கிக் கொண்டார். அவர் 10 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மோசமான பேட்டிங் ஃபார்மை ரோகித் சர்மா வெளிப்படுத்தி வருகிறார்.
IPL 2023: வாரி வழங்கிய இம்பேக்ட் பிளேயர்ஸ்: சென்னையின் துஷார் தேஷ்பாண்டே மோசமான சாதனை!
2018ஆம் ஆண்டு ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 23.8 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 133ஆகவும் இருந்தது. 2019ஆம் ஆண்டு பேட்டிங் சராசரி 28.9 என்றும், ஸ்ட்ரைக் ரேட் 128.54 ஆகவும் இருந்தது. அதேபோல் 2020ஆம் ஆண்டு பேட்டிங் சராசரி 27.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 127.7 ஆகவும், 2021ஆம் ஆண்டு பேட்டிங் சராசரி 29.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 127.4ஆகவும் இருந்துள்ளது.
IPL 2023 RCB: தோள்பட்டையை பிடித்துக் கொண்டு வெளியேறிய ஆர்சிபி வீரர் ரீஸ் டாப்ளி!
கடந்த ஆண்டில் பேட்டிங் சராசரி 19.1 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 120.1 ஆக மட்டுமே இருந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் என்பதால், 5 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் என்பதாலும், ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்து விமர்சனம் ஒன்றும் பெரிதாக வரவில்லை. ஆனால் கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே மும்பை இந்தியன்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
அதே போன்று தான் இந்த முறையும் நடக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோசமாக விளையாடி வரும் நிலையில், இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இந்த இரு அணிகளுக்குமே குறைவு என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், திலக் வர்மா என்று நட்சத்திரங்கள் இருந்தாலும் ரோகித் சர்மாவும் தனது சிறப்பான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தினால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முடியும்.
IPL 2023: ரோகித் சர்மாவின் கேட்சை பிடிக்க போய் மோதிக் கொண்ட தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ்!