IPL 2023 RCB: தோள்பட்டையை பிடித்துக் கொண்டு வெளியேறிய ஆர்சிபி வீரர் ரீஸ் டாப்ளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாப்ளி காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், இன்று நடக்கும் 5ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது. இஷான் கிஷான் 10 ரன்னிலும், கேமரூன் க்ரீன் 5 ரன்னிலும், ரோகித் சர்மா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
IPL 2023: ரோகித் சர்மாவின் கேட்சை பிடிக்க போய் மோதிக் கொண்ட தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ்!
அப்போது பவர்பிளே முடிந்து 7ஆவது ஓவரை கரண் சர்மா வீச வந்தார். அப்போது திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் களத்தில் ஆடி வந்தனர். போட்டியின் 7.3ஆவது பந்தில் திலக் வர்மா ஸ்கொயர் லெக் திசையில் பந்தை அடிக்க அங்கு பீல்டிங் செய்து கொண்டிருந்த ரீஸ் டாப்ளி பந்தை பிடிக்கும் முயற்சியில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த நிலையில், மருத்துவர்கள் வந்து பார்த்தும் காயம் அதிகம் இருந்த நிலையில், போட்டியிலிருந்து வெளியேறினார். எனினும், ஸ்கேன் பரிசோதனையில் தான் காயம் குறித்து மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று வர்ணனையாளர்கள் பேசிக் கொண்டனர்.
IPL 2023: ஐபிஎல்லில் இவர்கள் தான் கிங்: ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 19 வெற்றி!
ரீஸ் டாப்ளி 2 ஓவர்கள் வீசி 14 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். அதோடு, கேமரூன் க்ரீனின் விக்கெட்டையும் யார்க்கர் மூலமாக கைப்பற்றியுள்ளார். இதுவரையில் பெங்களூரும், மும்பையும் நேருக்கு நேர் மோதிய 32 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 19 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. எனினும், கடைசி 3 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அசால்ட்டா ஊதி தள்ளிய சஞ்சு சாம்சன்!