IPL 2023: ரோகித் சர்மாவின் கேட்சை பிடிக்க போய் மோதிக் கொண்ட தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ்!
ரோகித் சர்மா அடித்த கேட்ச்சைப் பிடிக்க முகமது சிராஜ் மற்றும் தினேஷ் கார்த்திக் சென்ற போது இருவரும் முட்டி மோதிய நிலையில் கேட்சையும் கோட்டை விட்டுள்ள்ளனர்.
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 மைதானங்களில் நடக்கும் 10 அணிகளின் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதலில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 2 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 3ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், 4 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும் வெற்றி பெற்றுள்ளன.
IPL 2023: ஐபிஎல்லில் இவர்கள் தான் கிங்: ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 19 வெற்றி!
இதையடுத்து பெங்களூருவில் இன்று நடக்கும் 5ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் கணக்கை தொடங்கினர். போட்டியின் 1.3ஆவது பந்தை டாப்லி வீசினார். இஷான் கிசான் பேட்டிங் ஆடினார்.
IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அசால்ட்டா ஊதி தள்ளிய சஞ்சு சாம்சன்!
அவர் பந்தை ஆஃப் சைடு பக்கமாக அடிக்க, வேகமாக ஓடிய ரோகித் சர்மா பாதி தூரம் சென்ற பிறகு மீண்டும் எதிரமுனைக்கு வந்தார். ஆனால், பந்து நேரடியாக ஸ்டெம்பில் பட்டிருந்தால் ஆட்டமிழந்திருப்பார். எனினும், முதல் கட்ட சோதனையிலிருந்து தப்பித்த ரோகித் சர்மாவுக்கு 2ஆவது முறையாகவும் சோதனை வந்தது.
ஆர்சிபிக்குள்ள நடந்த பயிற்சி போட்டி; 55 பந்துகளில் சதம் விளாசிய மைக்கேல் பிரேஸ்வெல்!
முகமது சிராஜ் வீசிய, 4.5ஆவது பந்தில் ரோகித் சர்மா அடிக்க, பந்து அவர் நின்றிருந்ததற்கு அருகாமையில் உயரத்திற்கு செல்ல சிராஜ் மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இருவரும் கேட்ச் பிடிக்க ஓடி வர இருவரும் மோதிக் கொண்டனர். இதனால், கேட்ச் கோட்டை விடப்பட்டது. உண்மையில் இது தினேஷ் கார்த்திக் பிடிக்க வேண்டிய கேட்ச் தான் என்று வர்ணனையாளர்கள் கூறினர். எனினும், 5ஆவது ஓவரில் ரோகித் சர்மா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆகாஷ் தீப் ஓவரின் 2ஆவது பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன்னுக்கு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.