IPL 2023: வாரி வழங்கிய இம்பேக்ட் பிளேயர்ஸ்: சென்னையின் துஷார் தேஷ்பாண்டே மோசமான சாதனை!
இம்பேக்ட் பிளேயர்ஸான வேகப்பந்து வீச்சாளர்கள் மோசமாக பந்து வீசி வாரி வழங்கியவர்களின் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு 16ஆவது சீசனுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசன் முதல் புதிய விதிமுறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆடும் லெவனுடன் சேர்த்து கூடுதல் வீரராக இம்பேக்ட் பிளேயர் என்று ஒருவரை எடுத்துக்கொள்ளலாம். அந்த வீரரை ஆட்டத்தின் போக்கை பொறுத்து ஆட்டத்தின் இடையே பயன்படுத்திக்கொள்ளலாம்.
IPL 2023 RCB: தோள்பட்டையை பிடித்துக் கொண்டு வெளியேறிய ஆர்சிபி வீரர் ரீஸ் டாப்ளி!
அப்படி பயன்படுத்தப்படும் வீரர்கள் அணிக்கு சாதகமாக தாத்தக்கை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக அணிக்கு பாதகமாக நடந்து கொண்டு எதிரணிக்கு இம்பேக்ட் கொடுக்கும் வீரர்களாக மாறிவிடுகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இம்பேக்ட் பிளேயராக கூடுதல் பவுலராக துஷார் தேஷ்பாண்டேவை சிஎஸ்கே அணி களமிறக்கியது. இதன்மூலம் ஐபிஎல்லில் இம்பேக்ட் பிளேயராக ஆடிய முதல் வீரர் என்ற சாதனையை துஷார் தேஷ்பாண்டே படைத்தார்.
IPL 2023: ரோகித் சர்மாவின் கேட்சை பிடிக்க போய் மோதிக் கொண்ட தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ்!
ஆனால், 3.2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், அதிகபட்சமாக 51 ரன்கள் வாரி வழங்கியுள்ளார். இதே போன்று, 2 ஆவது போட்டியில் பஞ்சாப் அணி சார்பில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ரிஷி தவான் ஒரேயொரு ஓவர் மட்டுமே வீசி 15 ரன்கள் கொடுத்துள்ளார். இதையடுத்து நேற்று நடந்த 4ஆவது போட்டியில் நவ்தீப் சைனி 2 ஓவர்கள் வீசி 34 ரன்கள் வாரி வழங்கியுள்ளார். தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இம்பேக்ட் பிளேயராக இடம் பெற்ற ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் 3 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
IPL 2023: ஐபிஎல்லில் இவர்கள் தான் கிங்: ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 19 வெற்றி!
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
- துஷார் தேஷ்பாண்டே - 3.2 ஓவர்கள் - 51 ரன்கள்
- ரிஷி தவான் - 1 ஓவர் - 15 ரன்கள்
- நவ்தீவ் சைனி - 2 ஓவர்கள் - 34 ரன்கள்
- ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் - 3 ஓவர்கள் 37 ரன்கள்
IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அசால்ட்டா ஊதி தள்ளிய சஞ்சு சாம்சன்!
இம்பேக்ட் பிளேயர்ஸாக இடம் பெற்று அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிஙஸ் அணியின் துஷார் தேஷ்பாண்டே இடம் பெற்றுள்ளார். இம்பேக்ட் பிளேயர்சாக இடம் பெற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த நிலையில், விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றவில்லை. இனி வரும் போட்டிகளில் இவர்களை அணி இம்பேக்ட் பிளேயர்ஸாக அணி எடுக்காது என்று தெரிகிறது. இவர்களுக்கு மாறாக அடுத்தபடியாக உள்ள மற்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.