கடைசியாக ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்று கொண்டாடத்தில் இருந்த போது தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரருக்கு ஆதரவாக ரசிகர்கள் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான 68ஆவது லீக் போட்டி 18ஆம் தேதி சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய ஆர்சிபி விராட் கோலி, ஃபாப் டூப்ளெசிஸ், ரஜத் படிதார் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரது அதிரடியால் 218 ரன்கள் குவித்தது.

சில நேரங்களில் 1 சதவிகித வாய்ப்பு கூட போதுமானது – விராட் கோலி, அண்ட் பூமா போஸ்டர் வைரல்!

பின்னர் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 201 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது. இதில், கேப்டன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா மட்டும் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் விளையாடினர்.

Scroll to load tweet…

இதில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. இதையடுத்து ஆர்சிபி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லும் அந்த 2 அணிகள் எது? ஆர்சிபி டிராபியை கைப்பற்ற அதிக வாய்ப்பு – ஹர்பஜன் சிங்!

அப்போது அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக தோனி, டக்கவுட்டில் அமர்ந்திருந்த ஆர்சிபியின் மற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கை கொடுத்துவிட்டு அங்கிருந்து தனது ஓய்வறைக்கு சென்றுவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கடந்த ஆண்டு சிஎஸ்கே சாம்பியனான வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.

அதில் தோனியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தோனி முதலாவதாக குஜராத் டைட்டன்ஸ் வீரர்களுக்கு கை கொடுக்க சென்றார். அதுமட்டுமின்றி கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது.

மழையால் போட்டி ரத்து – ஏமாற்றத்தோடு 3ஆவது இடம் பிடித்த RR – எலிமினேட்டர் போட்டியில் பலப்பரீட்சை!

இதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தோனி, ஹைதராபாத் வீரர்களுக்கு கை கொடுக்கச் சென்றார். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட தோனியை யாரும் விமர்சிக்க கூடாது என்பதற்காக ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

Scroll to load tweet…