MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சில நேரங்களில் 1 சதவிகித வாய்ப்பு கூட போதுமானது – விராட் கோலி, அண்ட் பூமா போஸ்டர் வைரல்!

சில நேரங்களில் 1 சதவிகித வாய்ப்பு கூட போதுமானது – விராட் கோலி, அண்ட் பூமா போஸ்டர் வைரல்!

பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி செல்ல 1 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்ததை சுட்டிக் காட்டிய விராட் கோலி சில நேரங்களில் 1 சதவிகித வாய்ப்பு கூட போதுமானது என்று கூறியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : May 20 2024, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Virat Kohli and Puma Poster

Virat Kohli and Puma Poster

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரையில் நடைபெற்ற 70 லீக் போட்டிகளைத் தொடர்ந்து நாளை முதல் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Royal Challengers Bengaluru vs Rajasthan Royals, Eliminator

Royal Challengers Bengaluru vs Rajasthan Royals, Eliminator

இந்த தொடரில் ஆர்சிபி விளையாடிய முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் இருந்தது. மேலும் வரிசையாக 6 போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்திருந்தது. அதன் பிறகு விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 9ஆவது இடம், 7ஆவது இடம், 5ஆவது இடம் என்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறியது.

38
Royal Challengers Bengaluru vs Rajasthan Royals, Eliminator

Royal Challengers Bengaluru vs Rajasthan Royals, Eliminator

எனினும், ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரு சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்தது. அதற்கு டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் வெற்றி தோல்வி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்தும் வாய்ப்பு இருந்தது.

48
Royal Challengers Bengaluru vs Rajasthan Royals, Eliminator

Royal Challengers Bengaluru vs Rajasthan Royals, Eliminator

ஆர்சிபிக்கு எதிரான 62ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் தோல்வி அடைந்ததன் மூலமாக சிஎஸ்கே அணியை 18 ரன்கள் அல்லது 18.1 ஓவர்களில் வீழ்த்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றிக்கும்.

58
IPL 2024

IPL 2024

எனினும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியின் நடுவில் மழையு பெய்தது. ஆனால், ஓவர்கள் குறைக்கப்படவில்லை. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. முதலில் விளையாடிய ஆர்சிபி 218 ரன்கள் குவித்தது. பின்னர் 201 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சிஎஸ்கே விளையாடியது. கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 17 ரன்கள் தேவை இருந்த நிலையில் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் களத்தில் இருந்தனர்.

68
Royal Challengers Bengaluru

Royal Challengers Bengaluru

ஆனால், சிஎஸ்கே 7 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதன் மூலமாக ஆர்சிபி கிடைத்த 1 சதவிகித வாய்ப்பையும் பயன்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு 4ஆவது அணியாக முன்னேறியது. முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்த ஆர்சிபி கடைசியாக விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்று கம்பீர தோரணையுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு வந்து சாதனை படைத்தது.

78
RCB Playoffs

RCB Playoffs

இந்த நிலையில் தான் ஆர்சிபிக்கு இருந்த 1 சதவிகித வாய்ப்பை விராட் கோலி சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பான விராட் கோலியின் பூமா போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஒரு சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் அந்த ஒரு சதவிகித வாய்ப்பு கூட போதுமானது என்று விராட் கோலி குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான பூமா போஸ்டர் தான் தற்போது வைரலாகி வருகிறது.

88
Virat Kohli And Puma Poster

Virat Kohli And Puma Poster

வரும் 22 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி 2ஆவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணியானது ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved