Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: ஜெய்பூரில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த லக்னோ; ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்து சாதனை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 26ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

LSG beat RR by 10 Runs Difference in 26th IPL Match at Jaipur
Author
First Published Apr 19, 2023, 11:44 PM IST | Last Updated Apr 19, 2023, 11:44 PM IST

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்றைய 26ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கைல் மேயர்ஸ் 51 ரன்கள் எடுத்த நிலையில், வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2023: ரொம்ப போரு: ஃபர்ஸ்ட் ஓவரே மெய்டன்: கேஎல் ராகுல் பேட்டிங்கை நேரடியாக விமர்சித்த கெவின் பீட்டர்சன்!

பின்னர் எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில், யஸஷ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் அவுட்டில் வெளியேறினார். அதன் பிறகு ஜோஸ் பட்லர் 40 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை இழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக கை நழுவிப் போனது. இறுதியாக கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 விக்கெட் அடுத்தடுத்து விழ, 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

அவரோட போஸ காப்பி அடிக்கத்தான் முடியும்; அவர மாதிரி வர்றது கஷ்டம் - கபாலி போஸுக்கு விளக்கம் கொடுத்த தோனி!

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் திருப்பு முனையை ஏற்படுத்தியது சஞ்சு சாம்சனின் ரன் அவுட், ஷிம்ரன் ஹெட்மையர் விக்கெட் மற்றும் துருவ் ஜூரெலின் கடைசி விக்கெட் ஆகியவை திருப்பு முனையாக அமைந்துவிட்டது. ஜூரெலின் கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சிக்க தீபக் கூடா கச்சிதமாக அவரது கேட்சை பிடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

IPL 2023: மந்தமாக ஆடிய லக்னோ; எவ்வளவு மள்ளுகட்டியும் 154 ரன்னு தான்; ராஜஸ்தான் செம!

 

 

இதுவரையில் நடந்த 2 போட்டிகளில் ராஜஸ்தான் மட்டுமே போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், முதல் முறையாக ராஜஸ்தானுக்கு எதிராக தனது முதல் வெற்றியை லக்னோ பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி ஜெய்பூரில் நடந்த 7 போட்டிகளில் 2ஆவது பேட்டிங் செய்த அணி தான் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல் முறையாக 7ஆவது போட்டியில் முதலில் ஆடிய அணி ஜெய்ப்பூரில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

IPL 2023: கணவர் கேஎல் ராகுல் சிக்ஸர் அடிப்பதை பார்த்து கை தட்டி உற்சாகம் செய்த மனைவி அதியா ஷெட்டி!

பந்து வீச்சைப் பொறுத்த வரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி கண்டு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

IPL 2023: மும்பையில் 1000ஆவது ஐபிஎல் போட்டி; என்ன செய்யலாம்? புதிய பிளான் போடும் பிசிசிஐ!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios