Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: ரொம்ப போரு: ஃபர்ஸ்ட் ஓவரே மெய்டன்: கேஎல் ராகுல் பேட்டிங்கை நேரடியாக விமர்சித்த கெவின் பீட்டர்சன்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் பேட்டிங்கை நேரடியாகவே கிரிக்கெட் வர்ணனையாளர் கெவின் பீட்டர் விமர்சனம் செய்துள்ளார்.

Kevin Pietersen Slams LSG Skipper KL Rahul batting against RR at Jaipur
Author
First Published Apr 19, 2023, 11:14 PM IST | Last Updated Apr 19, 2023, 11:14 PM IST

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஹோம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று விளையாடி வருகிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார். 

அவரோட போஸ காப்பி அடிக்கத்தான் முடியும்; அவர மாதிரி வர்றது கஷ்டம் - கபாலி போஸுக்கு விளக்கம் கொடுத்த தோனி!

அதன்படி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் களத்தில் இறங்கி நிதானமாக ஆடினர். இதில் முதல் ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட் ரன் ஏதும் கொடுக்கல்லை. முதல் ஓவரை முழுவதும் லக்னோ அணியின் கேப்டன் ராகுல் வீணடித்தார். முதல் 6 ஓவர்களில் லக்னோ அணி 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு ஆடிய லக்னோ அணி 10 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தது. அப்போது 10.4 ஆவது ஓவரில் ஜேசன் ஓவரில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 39 ரன்கள் எடுத்தார். 

IPL 2023: மந்தமாக ஆடிய லக்னோ; எவ்வளவு மள்ளுகட்டியும் 154 ரன்னு தான்; ராஜஸ்தான் செம!

இவரைத் தொடர்ந்து வந்த ஆயுஷ் பதோனி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் அதிரடி காடிய கைல் மேயர்ஸ் 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த தீபக் கூடாவும் தனது மோசமான ஃபார்மை காட்டினார். அவர் 2 ரன்னில் வெளியேறினார்.

கடைசியாக நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் நிதானமாக ரன் சேர்த்தனர். அவ்வப்போது சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தனர். எனினும், ஸ்டாய்னிஸ்  21 ரன்னில் ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரனும் 28 ரன்னில் ரன் அவுட்டானார். கடைசியாக வந்த குர்ணல் பாண்டியா 4 ரன்கள் எடுக்க, இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2023: கணவர் கேஎல் ராகுல் சிக்ஸர் அடிப்பதை பார்த்து கை தட்டி உற்சாகம் செய்த மனைவி அதியா ஷெட்டி!

இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் பேட்டிங் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளர் கெவின் பீட்டர்சன் நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:  கேஎல் ராகுல் பேட்டிங் செய்வதை பார்ப்பது என்பது எனது வாழ்நாளில் நான் பார்க்கும் போரிங்கான விஷயம் என்று கூறியுள்ளார். இந்த சீசனில் இதுவரையில் நடந்த போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 8, 20, 35, 18, 74 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் அவர் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios