IPL 2023: மந்தமாக ஆடிய லக்னோ; எவ்வளவு மல்லுகட்டியும் 154 ரன்னு தான்; ராஜஸ்தான் செம!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஹோம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று விளையாடி வருகிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, நவீன் உல் காக், ஆவேஷ் கான், யுத்விர் சிங் சராக், ரவி பிஷ்னாய்.
IPL 2023: கணவர் கேஎல் ராகுல் சிக்ஸர் அடிப்பதை பார்த்து கை தட்டி உற்சாகம் செய்த மனைவி அதியா ஷெட்டி!
அதன்படி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் களத்தில் இறங்கி நிதானமாக ஆடினர். முதல் 6 ஓவர்களில் லக்னோ அணி 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு ஆடிய லக்னோ அணி 10 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தது. அப்போது 10.4 ஆவது ஓவரில் ஜேசன் ஓவரில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 39 ரன்கள் எடுத்தார்.
IPL 2023: மும்பையில் 1000ஆவது ஐபிஎல் போட்டி; என்ன செய்யலாம்? புதிய பிளான் போடும் பிசிசிஐ!
இவரைத் தொடர்ந்து வந்த ஆயுஷ் பதோனி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் அதிரடி காடிய கைல் மேயர்ஸ் 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த தீபக் கூடாவும் தனது மோசமான ஃபார்மை காட்டினார். அவர் 2 ரன்னில் வெளியேறினார். கடைசியாக நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் நிதானமாக ரன் சேர்த்தனர். அவ்வப்போது சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தனர். எனினும், ஸ்டாய்னிஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரனும் 28 ரன்னில் ரன் அவுட்டானார். கடைசியாக வந்த குர்ணல் பாண்டியா 4 ரன்கள் எடுக்க, இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பவுலிங்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்த வரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட், ஜேசன் ஹோல்டர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.