IPL 2023: கணவர் கேஎல் ராகுல் சிக்ஸர் அடிப்பதை பார்த்து கை தட்டி உற்சாகம் செய்த மனைவி அதியா ஷெட்டி!
லக்னோ அணியின் கேப்டனும், தனது கணவருமான கேஎல் ராகுல் சிக்ஸர் அடிப்பதைப் பார்த்து அவரது மனைவி அதியா ஷெட்டி நேரில் கண்டு ரசித்துள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் இன்று நடக்கும் 26ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். முதல் ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரில் ராகுல் பேட்டிங் ஆடினார். ஆனால், அந்த ஓவர் முழுவதும் மெய்டன் ஆனது.
IPL 2023: மும்பையில் 1000ஆவது ஐபிஎல் போட்டி; என்ன செய்யலாம்? புதிய பிளான் போடும் பிசிசிஐ!
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, நவீன் உல் காக், ஆவேஷ் கான், யுத்விர் சிங் சராக், ரவி பிஷ்னாய்.
கேஎல் ராகுலுக்கு கொடுத்த 2 கேட்ச் வாய்ப்புகள் மற்றும் ஒரு ரன் அவுட் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் கோட்டைவிட்டனர். யசஷ்வி ஜெய்ஷ்வால் மற்றும் ஜேசன் ஹோல்டர் இருவரும் கேட்சை கோட்டைவிட்டனர். மேலும், யசஷ்வி ஒரு ரன் அவுட் வாய்ப்பயும் நழுவவிட்டார். முதல் 6 ஓவர்களில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பிறகு ராகுல் மற்றும் மேயர்ஸ் இருவரும் சுதாரித்துக் கொண்டு சிக்ஸரும், பவுண்டரியுமாக விரட்டினர்.
இந்தப் போட்டியை பார்ப்பதற்கு வந்துள்ள லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் மனைவி அதியா ஷெட்டி, தனது கணவர் சிக்ஸரும், பவுண்டரியும் அடிப்பதை நேரில் கண்டு ரசிப்பதோடு கைத்தட்டி உற்சாகமும் அளித்து வருகிறார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது வரையில் லக்னோ அணி 10 ஓவர்கள் முடிவில் 79 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.