IPL 2023: மும்பையில் 1000ஆவது ஐபிஎல் போட்டி; என்ன செய்யலாம்? புதிய பிளான் போடும் பிசிசிஐ!
வரும் 30 ஆம் தேதி ஐபிஎல் வரலாற்றின் 1000ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ள நிலையில், இதனை பிரம்மாண்டமாக கொண்டாட பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
ஐபிஎல் 1000 ஆவது போட்டி
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்டது.
ஐபிஎல் 1000 ஆவது போட்டி
இதில், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா மற்றும் பின்னணி பாடகர் அர்ஜித் சிங் ஆகியோரது கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்த நிலையில், வரும் 30 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் 1000ஆவது போட்டி நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்தப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதனை கொண்டாடும் வகையில், பிசிசிஐ சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செயய்ப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 1000 ஆவது போட்டி
எனினும் இது குறித்து முறையான அறிவிப்பு வெளிவரவில்லை. என்றாலும், இது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டி அதுவும் 1000ஆவது போட்டி என்பதால், கண்டிப்பாக கலை நிகழ்ச்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 1000 ஆவது போட்டி
இதற்காக ஒரு நிறுவனத்துடன் ஐபிஎல் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், மும்பையில் வான்கடே மைதானத்தில் 1000ஆவது போட்டி அதுவும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டி என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.