அவரோட போஸ காப்பி அடிக்கத்தான் முடியும்; அவர மாதிரி வர்றது கஷ்டம் - கபாலி போஸுக்கு விளக்கம் கொடுத்த தோனி!

ரஜினிகாந்தின் கபாலி பட போஸில், போஸ் கொடுத்த எம்எஸ் தோனி, அவர் மாதிரி வருவது என்பது கஷ்டம், அதனால் தான் அவர் போஸை காப்பி அடித்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார். 

CSK Skipper MS Dhoni Gives Explanation about his Rajinikanth Kabali Pose

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன் தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 24ஆது போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 226 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து, நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, பயிற்சியாளர் பிளெமிங், அம்பத்தி ராயுடு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

IPL 2023: மந்தமாக ஆடிய லக்னோ; எவ்வளவு மள்ளுகட்டியும் 154 ரன்னு தான்; ராஜஸ்தான் செம!

அப்போது தோனியிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பினர். அவர், ரஜினிகாந்த் நடித்த கபாலி பட ஸ்டைலில் போஸ் கொடுத்திருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது குறித்து தான் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த இரு படங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் யாரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர். 

IPL 2023: கணவர் கேஎல் ராகுல் சிக்ஸர் அடிப்பதை பார்த்து கை தட்டி உற்சாகம் செய்த மனைவி அதியா ஷெட்டி!

அதற்கு பதிலளித்த தோனி கூறியிருப்பதாவது: இது ஒப்பீடு இல்லை. ரஜினியின் போஸைத் தான் காப்பி அடிக்க முயற்சித்தோம். ஆனால், அவரைப் போன்று செயல்கள் செய்வதும், யோசிப்பதும் கடினம். அவரைப் போன்று ரொம்பவே கஷ்டம். அதனால், தான் அவரது போஸை காப்பி அடிக்க முயற்சி செய்தோம் என்றார். இந்த வீடியோவை சிஎஸ்கே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IPL 2023: மும்பையில் 1000ஆவது ஐபிஎல் போட்டி; என்ன செய்யலாம்? புதிய பிளான் போடும் பிசிசிஐ!

 

 

வரும் 21 ஆம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 29ஆவது போட்டி நடக்கிறது. இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்த சிஎஸ்கே அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023: டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்களின் ரூ.10 லட்சம் மதிப்பிலான பேட், பேடு, கிளவ்ஸ் உள்ளிட்டவைகள் திருட்டு!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios