- Home
- Sports
- Sports Cricket
- கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?
Gambhir Hits Back at Parth Jindal: இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நீக்க வேண்டும் என தெரிவித்த ஐபிஎல் அணியின் உரிமையாளருக்கு கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி முழுமையாக தோல்வி அடைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரிலும் இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது. அதுவும் கம்பீர் பதவியேற்ற பிறகு இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 10 தோல்விகள் மற்றும் இரண்டு டிரா பெற்றுள்ளது.
கம்பீரை மாற்ற கோரிக்கை விடுத்த பார்த் ஜிண்டால்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கவுதம் கம்பீரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்த பார்த் ஜிண்டால், ''கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் செயல்பாடு சிறப்பாக இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் நிலைமை சரியாக இல்லை.
வெற்றிக்கு அருகில் கூட வர முடியவில்லை
இந்திய அணியால் வெற்றிக்கு அருகில் கூட வர முடியவில்லை. சொந்த மண்ணில் முழுமையான தோல்வி. நமது டெஸ்ட் அணி சொந்த நாட்டில் இவ்வளவு பலவீனமாக இருந்ததை நான் நினைத்துப் பார்க்கவில்லை. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா ஒரு சிறப்பு ரெட்-பால் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம்'' என்று கூறியிருந்தார்.
பார்த் ஜிண்டால் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். டெஸ்ட் மட்டுமின்றி இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தே கம்பீரை நீக்க வேண்டும் என அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
கவுதம் கம்பீர் ஆவேசம்
இந்த நிலையில், கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாதவர்கள் அது குறித்து பேசும்போது அதிர்ச்சி அடைந்ததாக பார்த் ஜிண்டாலுக்கு கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஓடிஐ போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
கிரிக்கெட்டுடன் தொடர்பு இல்லாதவர்கள்
இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கவுதம் கம்பீர், ''கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் சில விஷயங்களைச் சொன்னார்கள். ஒரு ஐபிஎல் உரிமையாளர் பயிற்சியாளர் தொடர்பாக ஒரு கருத்து கூறினார். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் களத்தில் இருப்பது முக்கியம். நாங்கள் அவர்களின் களத்திற்குள் செல்ல மாட்டோம். எனவே, நாங்கள் செய்வதில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை'' என்று கம்பீர் ஆவேசமாக தெரிவித்தார்.

